சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் உள்துறைச் செயலாளருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்
Posted On:
28 FEB 2024 12:16PM by PIB Chennai
சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு துறைகள், வாரியங்கள், மாநகராட்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு மற்றும் சேர்க்கையில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை உரிய அளவில் அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் (என்.சி.பி.சி) தலைவர் திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. புதுதில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சண்டிகர் உள்துறைச் செயலாளர் மற்றும் சண்டிகர் நிர்வாகத்தின் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிரின் பரிந்துரையின் பேரில், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியின் ஆலோசகர் திரு ராஜீவ் வர்மா, பல்வேறு துறைகள், வாரியங்கள், கழகங்கள், கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு மற்றும் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை முன்மொழிந்துள்ளார்.
***
Release ID: 2009691)
ANU/PKV/PLM/RS/KRS
(Release ID: 2009749)
Visitor Counter : 72