குடியரசுத் தலைவர் செயலகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 'ஊதா திருவிழா' குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் நடத்தப்பட்டது

Posted On: 26 FEB 2024 6:44PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தில் இன்று (பிப்ரவரி 26, 2024) மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற 'ஊதா திருவிழா' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பார்வையிட்டார். கலை நிகழ்ச்சிக்குப் பிறகு, மாற்றுத் திறனாளிகளுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்.  

மாற்றுத்திறனாளின் உணவு திருவிழா, மாற்றுத்திறனாளிகளின் அனுபவங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்விழாவில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பர்பிள் ஃபெஸ்ட்', எனப்படும் இந்த ஊதா திருவிழா, பல்வேறு குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2009185)

ANU/AD/PLM/RS/ KRS

 (Release ID: 2009241) Visitor Counter : 60