ஜவுளித்துறை அமைச்சகம்

பாரத் டெக்ஸ் 2024 இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய பெரிய ஜவுளி கண்காட்சி நிகழ்வாக இருக்கும்: ஜவுளித்துறை செயலாளர்

Posted On: 23 FEB 2024 12:18PM by PIB Chennai

பாரத் டெக்ஸ் எனும் இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி  கண்காட்சி நிகழ்வு பாரத் மண்டபம் மற்றும் யஷோபூமி ஆகிய 2 இடங்களில் 22 லட்சம் சதுர அடி பரப்பில் நடைபெற உள்ளது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த கொள்முதலாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட  சர்வதேச நிபுணர்களின் உரையுடன் நடைபெற உள்ளது. இந்தத் தகவலை புதுதில்லியில் இன்று ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரச்னா ஷா தெரிவித்தார். பிப்ரவரி 26 திங்கட்கிழமை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.

11 ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கண்காட்சி, ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன், பாரத் டெக்ஸ் வர்த்தகம் மற்றும் முதலீடு என்ற 2 அமைப்புகளின் அடிப்படையான ஆதரவுடன் நடைபெற உள்ளது.

இந்த 4 நாள் நிகழ்வு பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளைத் தவிர, 3,500 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட கொள்முதலாளர்கள் மற்றும் 50,000க்கும் மேற்பட்ட வர்த்தகப் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள். ஏறக்குறைய 22 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, ஒட்டுமொத்த ஜவுளி மதிப்புச் சங்கிலியையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது இந்தியாவை ஜவுளித் துறையில் உலக அளவில் அதிகார மையமாக நிலைநிறுத்தவும், அதன் திறன்களை வெளிப்படுத்தவும், ஒட்டுமொத்த இந்திய ஜவுளி சூழல் அமைப்பு முழுவதிலும் உத்வேகத்தை உருவாக்கவும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2008281

***

ANU/PKV/BS/RS/KV



(Release ID: 2008337) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi , Telugu