ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உச்சநீதிமன்ற வளாகத்தில் முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

Posted On: 22 FEB 2024 1:55PM by PIB Chennai

உச்சநீதிமன்ற வளாகத்தில்' முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை' உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று திறந்து வைத்தார். ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை  அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் , முழுமையான ஆயுஷ் ஆரோக்கிய மையத்தை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் நிபுணத்துவ சேவைகளை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் உச்ச நீதிமன்றம் மற்றும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இடையே கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சந்திரசூட், "என்னைப் பொறுத்தவரை, இது ஒரு திருப்திகரமான தருணம். நான் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து இதற்காகப் பணியாற்றி வருகிறேன். நான் ஆயுர்வேதம் மற்றும் முழுமையான வாழ்க்கை முறையின் ஆதரவாளர். உச்சநீதிமன்றத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர், மேலும் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஊழியர்களும் இதில் சிகிச்சை பெற வேண்டும்.  அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் அனைத்து மருத்துவர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள முழுமைாயன ஆயுஷ் ஆரோக்கிய மையம் என்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல், மன நல்வாழ்வை நிவர்த்தி செய்யும் முழுமையான கவனிப்பை வழங்கும் ஒரு அதிநவீன வசதி ஆகும். ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தீவிர பங்கேற்புடன் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் உள்ள ஆயுஷ் ஆரோக்கிய மையம் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்துடன் இணைந்து உச்சநீதிமன்றத்தின் முன்முயற்சியாகும். நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிற ஊழியர்களுக்காக மேலும் ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த ஆரோக்கிய மையம் திறக்கப்படுகிறது.

***

ANU/PKV/BS/RS/KV


(Release ID: 2008033) Visitor Counter : 132