பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கிராம ஊராட்சிகளில் இடம் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 21 FEB 2024 1:10PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் இரண்டு நாள் தேசிய பயிலரங்கை நாளை (2024 பிப்ரவரி 22) மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கி வைக்கிறார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், போபாலில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை பள்ளியுடன் இணைந்து, கிராம ஊராட்சிகளில் இடம் சார்ந்த மேம்பாட்டுத் திட்டம் குறித்த கலந்துரையாடல் மற்றும் தேசிய பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்தியப் பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு மனு ஸ்ரீவத்சவா, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அலோக் பிரேம் நகர் மற்றும் போபால் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை பள்ளியின் இயக்குநர் பேராசிரியர் கைலாசா ராவ் எம் ஆகியோரும் இந்த தேசியப் பயிலரங்கில் பங்கேற்க உள்ளனர்.

ஊரமைப்புத் துறைகள், முன்னணி திட்டமிடல் மற்றும் கட்டடக் கலை நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்துறை வல்லுநர்கள், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு பிரதிநிதிகள், நபார்டு வங்கி மற்றும் பல்வேறு அரசு முகமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பயிலரங்கில் பங்கேற்கின்றனர். 14 மாநிலங்களைச் சேர்ந்த 34 கிராம ஊராட்சிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் செயல்பாட்டாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தேசிய பயிலரங்கு, பஞ்சாயத்துகள் மற்றும் அரசு முகமைகளிடையே பல்வேறு கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கான சிறந்த கலந்துரையாடல் தளத்தை வழங்கும். உள்கட்டமைப்பு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, திறன் மேம்பாடு உள்ளிட்ட கிராமப்புற நீடித்த வளர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதை இந்தத் தேசியப் பயிலரங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

ANU/PKV/PLM/RS/KRS/DL


(Release ID: 2007776) Visitor Counter : 101
Read this release in: English , Urdu , Hindi , Telugu