பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓஎன்ஜிசி மும்பை எண்ணெய் வயல் தேசிய பொக்கிஷம்: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் பூரி

Posted On: 19 FEB 2024 4:55PM by PIB Chennai

மும்பை எண்ணெய் வயல் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது ஒரு அசாதாரணமான மற்றும் புகழ்பெற்ற பயணத்தைக் குறிக்கிறது என்று 2024, பிப்ரவரி 18 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி பாராட்டினார்.

மும்பை எண்ணெய் வயல் கண்டறியப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எதிர்கால ஆய்வுக்கான கலங்கரை விளக்கமாக மும்பை எண்ணெய் வயலின் முக்கிய பங்கை வலியுறுத்திய பூரி, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஓ.என்.ஜி.சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிய கண்டுபிடிப்புகளை உற்பத்தியில் கொண்டு வருவதில் ஓ.என்.ஜி.சி.யின் முயற்சிகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மேலும் முன்னேற்றங்களுக்கான ஒரு உத்திபூர்வ பாதையை அடையாளம் காட்டினார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு ரமேஷ்வர் தெலி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் ஜெயின், மற்றும் ஓ.என்.ஜி.சி. தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு அருண் குமார் சிங் ஆகியோர் மும்பை எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

வண்டல் படுகையில் ஆய்வை வழி நடத்த ஓ.என்.ஜி.சி.யை ஊக்குவித்த திரு பூரி, உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கவும் புதிய கண்ணோட்டங்களுடன் அனுபவத்தை கலப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கோவாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐஎஸ்பிஹெச்இஎம் மையத்தை அவர் பாராட்டினார்.  இந்த மையம், மின்சாரம் மற்றும் தொழில்துறையில் பாதுகாப்பை உறுதி செய்யும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, பிரதமரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்றார்.

மும்பை எண்ணெய் வயலின் வளர்ச்சிக்கு பங்களித்த முன்னாள் தலைவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களை கௌரவிப்பதன் மூலம் ஓ.என்.ஜி.சி இந்த நிகழ்வை நினைவு கூர்ந்தது. கூடுதலாக, "ஓ.என்.ஜி.சி வாக்குறுதி" என்ற தலைப்பில் நடிகர் பரேஷ் ராவல் நடித்த குறும்படத்தில் நிறுவனத்தின் பயணம், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் சித்தரிக்கப்பட்டது.

தலைவர் திரு அருண் குமார் சிங் தனது வரவேற்புரையில், தீவிர உற்பத்தித் திட்டங்கள் மற்றும் ஆய்வுக்கான குறிப்பிடத்தக்க முதலீடுகளை உறுதியளித்தார். விரைவில் எண்ணெய் வயல் போன்ற ஒரு புதிய துறையை கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு கடைசி சொட்டு எண்ணெயும் மீட்கப்படும் வரை மும்பை எண்ணெய் வயலில் உள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாக ஆராய்வதற்கான ஓ.என்.ஜி.சி.யின் உறுதிப்பாட்டை தலைவர் மீண்டும் வலியுறுத்தினார். இது வள பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகிறது.

***
ANU/AD/BS/RS/KV/DL


(Release ID: 2007179) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi , Marathi