பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இலங்கை அரசின் மூத்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தின் முதல் பிரிவு பயிற்சி புதுடில்லியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
17 FEB 2024 12:23PM by PIB Chennai
இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தின் முதல் பிரிவு பயிற்சி புதுடில்லியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் நிறைவுற்றது.
இலங்கையின் மூத்த குடிமைப் பணி அதிகாரிகளுக்கான திறன்மேம்பாட்டு திட்டத்தின் முதல் பிரிவின் பயிற்சி 2024 பிப்ரவரி 12 முதல் 17 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இலங்கைப் பிரதமரின் செயலாளர் திரு அனுர திசாநாயக்க தலைமையிலான இலங்கையின் பதினான்கு மூத்த குடிமைப்பணி அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் தங்களது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கைப் பிரதமரின் செயலாளரும் இலங்கை தூதுக்குழுவின் தலைவருமான அனுர திசாநாயக்க, நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் பயிற்சி கலந்துரையாடல்கள் இலங்கையின் கற்றல் முன்னுதாரணங்களுக்கும் இந்தியாவின் சிறந்த நடைமுறைகள் மற்றும் வெற்றிகரமான செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும் உதவும் என்று கூறினார். விரிவான திறன் வளர்ப்பு திட்டத்தை உருவாக்கியதற்காக இந்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
*******
ANU/PKV/BS/DL
(रिलीज़ आईडी: 2006784)
आगंतुक पटल : 88