மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் மீன்வளத் துறை 2024 பிப்ரவரி 19 அன்று புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது
Posted On:
17 FEB 2024 2:21PM by PIB Chennai
மீனவர்களுக்கான நுகர்வோர் அல்லது சந்தைகளுக்கான நேரடி அணுகலை வலுப்படுத்துவதற்கும், மத்திய மீன்வளத் துறையில் டிஜிட்டல் வர்த்தகத்தின் திறனைத் திறப்பதற்கும், மத்திய மீன்வளத் துறை, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் முன்னிலையில் 2024 பிப்ரவரி19, அன்று புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் கையெழுத்திடப்பட உள்ளது.
மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, மீன்வளத்துறை இணை செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, மீன்வளத்துறை இணை செயலாளர் திருமதி நீது குமாரி பிரசாத், ஓஎன்டிசி நிர்வாக இயக்குனர் திரு டி. கோஷி, ஓஎன்டிசி துணைத் தலைவர் திருமதி அதிதி சிங் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் 50 மீன் பண்ணை உற்பத்தியாளர் அமைப்புகள் (FFPOs) உள்ளிட்டவை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
மீன்வளத் துறையில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும், ஏனெனில் இந்தத் துறை வெளிப்படையான கட்டமைப்புடன் (ONDC ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைவது இதுவே முதல் முறையாகும். மீனவர்கள், மீன் பண்ணை உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மீன்வளத்துறையில் தொடர்புடைய இதர பங்கெடுப்பாளர்கள் பரந்த சந்தைகளை அணுகவும், வாடிக்கையாளர்களை அணுகுவதற்கான ஒரு டிஜிட்டல் தளத்தை இந்த அத்தியாவசிய நடவடிக்கை வழங்கும்.
இந்த ஒத்துழைப்பு தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை செயல்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், கூட்டுமயமாக்கல் மற்றும் சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.
டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகளை ஏற்றுக்கொள்வது மீன்வளத் தொழில்களுக்கு மேம்பட்ட நம்பிக்கை, குறைக்கப்பட்ட பரிவர்த்தனை செலவுகள், அதிகரித்த சந்தை அணுகல், மேம்பட்ட வெளிப்படைத்தன்மை, அதிகரித்த போட்டித்தன்மை, புதுமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்கும்.
வெளிப்படையான கட்டமைப்பு மீன்வளத் துறையில் உற்பத்தியாளர்கள், பதப்படுத்துபவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே கூட்டுப்பண்ணையின் நன்மைகளைப் பயன்படுத்துவதற்கான தடையற்ற ஒருங்கிணைப்பை இந்த ஒத்துழைப்பு எளிதாக்கும். திறமையான விநியோகச் சங்கிலி மேலாண்மை, மதிப்புச் சங்கிலிகள் மற்றும் சந்தை அணுகலை செயல்படுத்துகிறது.
மேலும், இந்த ஒத்துழைப்பு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோர், சுய உதவிக் குழுக்கள், சிறு மற்றும் குறு மீனவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறையில் உள்ள சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு திறன் மேம்பாட்டு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்பு (ONDC) பிரிவு 8 நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது, இது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சியாகும், இது டிஜிட்டல் அல்லது மின்னணு கட்டமைப்புகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்தின் அனைத்து அம்சங்களுக்கும் வெளிப்படையான கட்டமைப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீனவர்கள், மீன் பண்ணை உற்பத்தியாளர் அமைப்பு, மீன்வளத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து பங்கெடுப்பாளர்களுக்கும் உற்பத்தி, விலை மற்றும் விநியோக உத்திகள் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு ஒரு தளத்தை வழங்குவதும், அதிகாரம் அளிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
மின்னணு சந்தைப்படுத்துதலில் இந்தக் கட்டமைப்பு ஒரு தனித்துவமான தளமாக திகழ்வதுடன், அதிக அளவில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் இதர மீனவர் கூட்டுறவு அமைப்புகளை இணைப்பதில் மீன்வளத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும். உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் ஒரு நேரடி சேனலை வழங்குவதன் மூலம், இடைத்தரகர்களை நம்பியிருப்பதைக் குறைப்பதில் இது ஆதரவளிக்கும்.
இது மீனவர்களுக்கு அதிக லாபத்திற்கும் நுகர்வோருக்கு குறைந்த விலைக்கும் வழிவகுக்கும். இந்த முயற்சி சிதறிக்கிடக்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள குறு மீனவர்களுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தின் மூலம் செலவு நன்மைகள் கிடைக்கும்.
இது 600க்கும் மேற்பட்ட நகரங்களில் 2023 நவம்பர் மாதத்தில் 6.3 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளனர்,
தற்போது, 3000 க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பல்வேறு கட்டமைப்புப் பங்கேற்பாளர்கள் மூலம் இதன் ஒரு பகுதியாக பதிவு செய்துள்ளன. மேலும், சுமார் 400 சுய உதவிக் குழுக்கள், குறு தொழில்முனைவோர் மற்றும் சமூகத் துறை நிறுவனங்கள் இந்த கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
மீன்வளத்துறையின் நேர்மறையான தாக்கத்தை அதிகப்படுத்தும் வகையில், பொருளாதார அதிகாரமளித்தல் வாயிலாக, சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அளிக்கும் மகத்தான ஆற்றலுடன் வளர்ந்து வரும் துறையாக மீன்வளம் உருவெடுத்து வருகிறது.
பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டம், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டு நிதி போன்ற திட்டங்களின் மூலம் மீன்வளத் துறையை முழுமையாக மாற்றுவதிலும், பொருளாதார மேம்பாடு மற்றும் வளத்தைக் கொண்டுவருவதிலும் மத்திய அரசு எப்போதும் முன்னணியில் உள்ளது.
இது 2014-15 முதல் 10.87% வருடாந்திர சராசரி வளர்ச்சியை நிரூபித்துள்ளது. இந்த வளர்ச்சி மீனவர்கள், 2000த்துக்கும் மேற்பட்ட மீன் பண்ணை உற்பத்தியாளர் அமைப்புகள் , கூட்டுறவு மற்றும் நமது நாடு முழுவதும் பரவியுள்ள பிற பங்கெடுப்பாளர்களர்களின் ஒற்றுமையின் வெளிப்பாடாகும்.
இத்துறை படிப்படியாக வளர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வளர்ச்சியைத் தவிர, மீனவர்களின் மதிப்புச் சங்கிலியில் உள்ள பங்கெடுப்பாளர்களின் நலனுக்காக திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் எடுக்கப்படுவது அவசியம், குறிப்பாக மீன் பண்ணை உற்பத்தியாளர்கள் அமைப்புகள், மீள்தன்மை மற்றும் வளர்ச்சியின் வழிகாட்டியாக உள்ளன. .
மீன்வளத்துறை அதிகாரிகள், மீன் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடர்புடைய பங்கெடுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*******
ANU/PKV/BS/DL
(Release ID: 2006780)
Visitor Counter : 76