கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான கூட்டத்திற்கு மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் நாளை தலைமை வகிக்கிறார்

Posted On: 15 FEB 2024 5:05PM by PIB Chennai

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவது தொடர்பான கூட்டத்தி்ற்கு நாளை (16.02.2024) ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதன் மூலம் திட்டங்களை விரைவுபடுத்துவதை  இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளிப்படையான விவாதத்திற்கான ஒரு தளமாக இந்த நிகழ்வு அமையும்.

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு- 2023, உலகளவில் மிகப்பெரிய கடல்சார் உச்சிமாநாடுகளில் ஒன்றாக அமைந்தது. மூன்று நாள் நிகழ்வின் போது ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 360 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துறைமுக மேம்பாடு, நவீனமயமாக்கல் முதல் பசுமை ஹைட்ரஜன், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, கப்பல் துறை, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் துறையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

***

(Release ID: 2006307)

ANU/PKV/PLM/AG/KRS


(Release ID: 2006350) Visitor Counter : 88


Read this release in: English , Urdu , Hindi , Telugu