ஜல்சக்தி அமைச்சகம்
நீர்வள இயக்கம், தூய்மை பாரத இயக்கம் குறித்த தேசிய மாநாடு உத்தரபிரதேசத்தின் லக்னோவில் 2024 பிப்ரவரி 16 - 17 தேதிகளில் நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
14 FEB 2024 7:26PM by PIB Chennai
நீர்வள இயக்கம், தூய்மை பாரத இயக்கம் குறித்த தேசிய மாநாட்டை உத்தரபிரதேசத்தின் லக்னோவில் 2024 பிப்ரவரி 16 - 17 தேதிகளில் நடத்துவதற்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த தேசிய மாநாடு, இரண்டு இயக்கங்களின் வெற்றியைத் தக்கவைக்க, பங்கேற்பாளர்களிடையே புதுமை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், யோசனைகள், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த விவாதங்களுக்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்க உள்ளது.
இம்மாநாட்டில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் முக்கிய உரையாற்ற உள்ளார். நீடித்த தண்ணீர், துப்புரவு, சுகாதாரம் நடைமுறைகள் குறித்த விவாதங்களுக்குரிய ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
ஊரகப் பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதங்களை முன்னெடுப்பதிலும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதிலும், ஊரக சுகாதாரத்தில் கூட்டுத் திட்டமிடல் மற்றும் புதுமையை உறுதி செய்வதன் மூலம் முன்னோக்கிச் செல்வதற்கான பாதைக்கு வழிகாட்டுவதிலும் இந்த மாநாடு முக்கியமானதாக இருக்கும்.
கிராமப்புறங்களில் தண்ணீர், துப்புரவு, சுகாதாரத் துறைகளில் புதுமையான தீர்வுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் டிஜிட்டல் காட்சிகளும் இந்த மாநாட்டில் இடம்பெறும். நாடு முழுவதும் நீர்வள இயக்கம், தூய்மைப்பாரத இயக்கம் பயணம் உட்பட பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அடையப்பட்ட முன்னேற்றங்கள், வெற்றிகள் குறித்த விரிவான தகவல்களை இம்மாநாட்டில் அறிய முடியும்.
---
(Release ID: 2006041)
ANU/AD/IR/KPG/KRS
(रिलीज़ आईडी: 2006084)
आगंतुक पटल : 146