பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி வலியுறுத்தினார்

Posted On: 14 FEB 2024 11:15AM by PIB Chennai

கோவாவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரம் 2024 மாநாட்டின் போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டாளர்களின் சர்வதேச மாநாடு 2024 பிப்ரவரி 5 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய தெற்கு, தென்கிழக்கு ஆசிய தேசிய எரிசக்தி கட்டுப்பாட்டு அதிகாரிகளும், சர்வதேச தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் முக்கியக் கருப்பொருளான "இயற்கை எரிவாயு மேம்பாட்டிற்கான பாதைகளை வழிநடத்துதல்", வளரும் நாடுகளின் பருவநிலை இலக்குகளை பூர்த்தி செய்ய இன்றியமையாத விரைவான, வலுவான கரியமிலவாயு உமிழ்வுக் குறைப்பை இயக்குவதில் இயற்கை எரிவாயுவின் பங்கை வலியுறுத்தியது. எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, விரைவான உள்கட்டமைப்பு மேம்பாடு, பொது-தனியார் கூட்டாண்மை, நிறுவன வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஐந்து முழுமையான அமர்வுகளில் விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பேசிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தினார். இந்த முன்முயற்சிக்காக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர், எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டுப்பாட்டாளர்களின் சர்வதேச ஒழுங்குமுறைக் கூட்டம், இந்திய எரிசக்தி வாரத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

---

ANU/PKV/IR/KPG/KV


(Release ID: 2005824) Visitor Counter : 100


Read this release in: English , Urdu , Hindi , Telugu