பாதுகாப்பு அமைச்சகம்

சென்னையில் பாரத் மின்னணு நிறுவனம், ஆவடியில் போர் தளவாட வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றை பாதுகாப்பு செயலாளர் திரு கிரிதர் அரமனே பார்வையிட்டார்

Posted On: 13 FEB 2024 6:00PM by PIB Chennai

சென்னையில் பாரத் மின்னணு நிறுவனம் (பெல்), ஆவடியில் போர் தளவாட  வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் (ஏவிஎன்எல்) ஆகியவற்றை பாதுகாப்பு செயலாளர் திரு கிரிதர் அரமனே இன்று பார்வையிட்டார்.

பெல் முதன்மை மேலாண்மை இயக்குநர் திரு பானு பிரகாஷ் ஸ்ரீவத்சவா முன்னிலையில் அவர் இந்தப் பிரிவின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். ஆலையில் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி வசதிகளைப் பாராட்டிய அவர், உற்பத்தித்திறன், செயல்திறனை அதிகரிக்குமாறு தொடர்புடையவர்களை கேட்டுக்கொண்டார். மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு  உள்நாட்டிலேயே  ஆயுதங்களை தயாரிப்பதில் பெல் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆவடியில் உள்ள  போர் தளவாட  வாகனங்கள் உற்பத்தி நிறுவன (ஏ.வி.என்.எல்) தலைமை அலுவலகம், கனரக வாகன தொழிற்சாலை (எச்.வி.எஃப்) மற்றும் என்ஜின் தொழிற்சாலை ஆவடி (ஈ.எஃப்.ஏ) ஆகியவற்றையும் பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டு உற்பத்திப் பணிகள், ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திட்டப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு அரமானே, உலகளாவிய உற்பத்தி நடைமுறைகள், மிக உயர்ந்த தரம்  குறித்து எடுத்துரைத்தார்.

ஆராய்ச்சி, மேம்பாடு, புதிய தயாரிப்பு மேம்பாடு, உள்நாட்டுமயமாக்கல் முன்முயற்சிகள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன், போட்டித்தன்மையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.  

***

ANU/SM/IR/RS/KRS



(Release ID: 2005717) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi , Telugu