கனரகத் தொழில்கள் அமைச்சகம்

உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கு ஏலதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உலகளாவிய டெண்டருக்கு முந்தைய ஏலக் கூட்டத்தை (எம்.எச்.ஐ) நடத்தியது

Posted On: 13 FEB 2024 12:24PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்தியத் தொழிலக நிதிக் கார்ப்பரேஷன்  நிறுவனத்தில் ஏலத்திற்கு முந்தையக் கூட்டத்தை கனரகத் தொழில்துறை அமைச்சகம் நடத்தியது. மேம்பட்ட வேதியியல்  செல்களை அதிகரிக்க உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 10 ஜிகாவாட் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் ஏசிசி திறனுக்கான இரண்டாவது கட்ட ஏலம் மேற்கொள்ளப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் நித்தி ஆயோக், எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சகம்  உள்ளிட்ட அரசு அமைப்புகள் பெரும்பான்மையாகப் பங்கேற்றன.

ஜிகா அளவிலான மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான உலகளாவிய டெண்டருக்கு முந்தைய ஏலம் குறித்த கூட்டம் நடத்தப்பட்டது. இது ஒட்டுமொத்தமாக 10 ஜிகாவாட் திறன் கொண்ட பிஎல்ஐ ஏசிசி திட்டத்தின் கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதுமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான அதன் உறுதிப்பாட்டுடன் இணைந்து, நாட்டிற்குள் நல்ல தொழில்நுட்ப  உற்பத்தியை ஊக்குவிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

டெண்டர் ஆவணங்கள் 2024, ஜனவரி 24 முதல் கிடைக்கும். ஏலத்தில் பங்கேற்க  2024 ஏப்ரல் 22-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2024 ஏப்ரல் 23-ம் தேதி அன்று ஏலம் நடைபெறுகிறது. இந்த அணுகுமுறை ஏலதாரர்களைத் தேர்ந்தெடுப்பதில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது,

உலகளாவிய டெண்டர் செயல்முறை பற்றிய கூடுதல் தகவல்களை கனரக தொழில்கள் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

***

(Release ID: 2005492)

ANU/SMB/BS/AG/RR



(Release ID: 2005551) Visitor Counter : 45