கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மேற்கு வங்கத்தின் மையா உள்நாட்டு சுங்கத் துறைமுகத்திலிருந்து வங்க தேசத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் துறைமுகம் வரையிலான சரக்குக் கப்பல்கள் போக்குவரத்துக்கான முதலாவது சோதனை ஓட்டத்தை திரு சாந்தனு தாக்கூர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
12 FEB 2024 5:50PM by PIB Chennai
இந்தியாவின் மையா துறைமுகத்தில் இருந்து வங்க தேசத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் துறைமுகத்திற்கு கற்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் முதல் சோதனை இயக்கம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. கற்களை ஏற்றிச் சென்ற எம்.வி.தேஷ் பங்களா என்ற வங்கதேச கொடி கப்பலை மேற்கு வங்கத்தில் உள்ள மையா உள்நாட்டு சுங்கத்துறை துறைமுகத்தில் இருந்து மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் கிழக்கு நோக்கிய கொள்கைக்கு ஏற்ப இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பில் இது ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவாலின் திறமையான வழிகாட்டுதலின் கீழ், இந்தியா தனது உள்நாட்டு நீர்வழித் துறையின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான விரிவான பன்முகத் திட்டத்தின் மீது கவனம் செலுத்தும் ஒரு மாற்றத்தக்க பயணத்தைத் தொடங்கியுள்ளது" என்று கூறினார்.
"இந்தியா- பங்களாதேஷ் இடையேயான மரபார்ந்த பாதை எண் 5 & 6 வழியாக மையாவிலிருந்து சுல்தான்கஞ்ச் வரை சோதனை இயக்கம் மேற்கொள்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையேயான நீர்வழி அடிப்படையிலான போக்குவரத்துக்கு புதிய பரிமாணங்களை சேர்க்கும், ஏனெனில் இது இரு நாடுகளுக்கும் இடையிலான குறுகிய நீர்வழி பாதை" என்று திரு தாக்கூர் மேலும் கூறினார்.
இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சோதனையோட்ட தொடக்க நிகழ்வில், கொல்கத்தாவில் உள்ள பங்களாதேஷ் நாட்டின் தூதரக அதிகாரிகள், கொல்கத்தாவின் சுங்கப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் பிரமுகர்கள் கலந்து
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, மையா மற்றும் சுல்தான்கஞ்ச் இடையே ஐந்து கப்பல் இயக்கத்தை மேற்கொள்ள பங்களாதேஷ் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் சோதனை முறையில் சரக்கு கப்பல்களை அனுப்புவது நீர்வழிகளின் விரிவடைந்து வரும் திறனை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே மேம்பட்ட இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய தொடக்கத்தையும் குறிக்கிறது.
-------
ANU/PKV/BS/RS/KRS
(Release ID: 2005408)
Visitor Counter : 92