பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஆதி மஹோத்சவத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
பழங்குடியினருக்கான துணிகர மூலதன நிதியத்தை மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தொடங்கி வைத்தார்
Posted On:
10 FEB 2024 5:05PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இன்று ஆதி மஹோத்சவம் 2024 எனப்படும் பழங்குடியினர் திருவிழாவை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது நாடு பன்முகத்தன்மை நிறைந்தது என்று கூறினார். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உணர்வு எப்போதும் இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வொருவரின் பாரம்பரியம், உணவு, மொழி ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், பின்பற்றவும் உள்ள ஆர்வமே இந்த உணர்வுக்குக் காரணம் என்று அவர் கூறினார். ஆதி மகோத்சவத்தில் பல்வேறு மாநிலங்களின் பழங்குடி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தனித்துவமான சங்கமத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகக் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு முன்னிலையில், பழங்குடியினருக்கான துணிகர மூலதன நிதியத்தை (VCF-ST) தொடங்கி வைத்தார். பழங்குடியினருக்கான துணிகர மூலதன நிதியத்தை (VCF-ST) தொடங்கி வைத்ததற்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா , பழங்குடியின பாரம்பரியம் மற்றும் பெருமையை ஆதி மகோத்சவம் பிரதிபலிக்கிறது என்றார். நாட்டில், 11 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர் என்றும் இந்த கொண்டாட்டம் பழங்குடியினருக்கு நம்பிக்கை மற்றும் மரியாதையின் ஒளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பழங்குடி சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆதி மஹோத்சவம் 300-க்கும் மேற்பட்ட அரங்கங்களைக் கொண்டுள்ளது என்றும் இதில் 1000 கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர் எனவும் திரு அர்ஜுன் முண்டா கூறினார்.
ஆர்வமுள்ள நபர்கள் பழங்குடியினர் துணிகர மூலதன நிதியம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.vcfst.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
----
ANU/PKV/PLM/DL
(Release ID: 2004851)
Visitor Counter : 114