கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயணிகள் படகு சேவைகள்

Posted On: 09 FEB 2024 1:40PM by PIB Chennai

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்குப் பயணிகள் படகு சேவை 14.10.2023 அன்று கொடியசைத்து தொடங்கப்பட்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 20 வரை நான்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டது. அதன் பின்னர் படகு இயக்கத்திற்கு சாதகமாக வானிலை இல்லை.  இந்தப் படகு போக்குவரத்துக்கு பயணிகளிடம் வரவேற்பு திருப்திகரமாக இருந்தது.

கேரளாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையே வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக பயணிகள் கப்பல் சேவையை தொடங்க மூன்று முக்கியப் பிரமுகர்களின் குறிப்புகள் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திற்கு வந்துள்ளன.

  1. திரு ஏ.எம்.ஆரிஃப், நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை), ஆலப்புழா, கேரளா – 20.09.2023 தேதியிட்ட கடிதம்
  2. திரு அகமது தேவர்கோவில், துறைமுகங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் மற்றும் ஆவணக்காப்பக அமைச்சர், கேரள அரசு – 17.10.2023 தேதியிட்ட கடிதம்
  3.  திரு அந்தோணி ராஜு, போக்குவரத்துத் துறை அமைச்சர், கேரள அரசு – 17.10.2023 தேதியிட்ட கடிதம்

இது குறித்து இந்தியக் கப்பல் கழகம், கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம், கேரளக் கடல்சார் வாரியம், கேரள அரசின் கீழ் உள்ள நோர்கா ரூட்ஸ் ஆகிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இந்தியக் கப்பல் கழகம், நோர்கா ரூட்ஸ் மற்றும் கேரள கடல்சார் வாரியம் இடையே 10.11.2023 & 15.12.2023 ஆகிய தேதிகளில் மெய்நிகர் சந்திப்புகள் நடைபெற்றன, அதில் கே.எம்.பி மற்றும் நோர்கா ஆகியவை கேரளா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே போக்குவரத்து நடவடிக்கைகளைத் தொடங்க பொருத்தமான கப்பல்களுடன் ஆர்வமுள்ள தரப்பினர் / செயல்பாடுகளிடமிருந்து சலுகையைக் கோரும் விளம்பரத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது. பயணிகளின் தேவை, கப்பல் செயல்பாடுகளின் காலம் மற்றும் டிக்கெட் விலை குறித்து நோர்கா கணக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இத்தகவலைத் தெரிவித்தார்.

----

(Release ID: 2004344)

ANU/SMB/PKV/KPG/KRS


(Release ID: 2004603) Visitor Counter : 82


Read this release in: English , Urdu , Hindi