சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜி.பி.எஸ் அடிப்படையிலான கட்டண வசூல்

Posted On: 08 FEB 2024 4:15PM by PIB Chennai

புவி ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (ஜி.என்.எஸ்.எஸ்) அடிப்படையிலான தடையற்ற சுங்கவரி வசூல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்க ஒரு ஆலோசகரை அரசு நியமித்துள்ளது.

முதற்கட்டமாக ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு சுங்கவரி வசூல் முறையை தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் முன்னோடித் திட்டமாக எஃப்ஏஎஸ் குறியீட்டுடன் கூடுதல் வசதியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முழுமையடையாத கேஒய்சி- உடன் பாஸ்டாக் பயனர்களை ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' செயல்முறையை முடிக்க ஊக்குவிக்கிறது. இதன் மூலம் தவறான பாஸ்டாக் பயன்பாடு குறைக்கப்படும். மேலும் நெடுஞ்சாலைகளில் தடையற்ற வாகனப் போக்குவரத்தை மேம்படுத்த இது உதவும்.

கட்டண பிளாசாக்களில் சாலை பயனர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காக பாஸ்டாக் அமைப்பை 100% கேஒய்சி இணக்கமானதாக மாற்றுவதை நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்திய முயற்சியின் மூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2004011)

ANU/SMB/PKV/AG/KRS


(Release ID: 2004139) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi