புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவி அறிவியல் துறையில் வளர்ச்சி

Posted On: 07 FEB 2024 5:29PM by PIB Chennai

நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு புவி அறிவியல் மற்றும் வானியல் கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான சில நடவடிக்கைகள்:

2014-ம் ஆண்டில் 15 ஆக இருந்த டாப்ளர் வானிலை ரேடார்கள் கட்டமைப்பு 2023-ம் ஆண்டில் 39 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2014-ல் 675 ஆக இருந்த தானியங்கி வானிலை நிலையங்கள் 2023-ல் 1208 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2014-ல் 1350 ஆக இருந்த தானியங்கி மழை அளவீட்டு அமைப்புகள் 2023-ல் 1382 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2014-ல் 19 ஆக இருந்த அதிவேக காற்று பதிவு அமைப்பு 2023-ல் 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2014-ல் 3955 ஆக இருந்த மாவட்ட வாரியான மழை கண்காணிப்பு திட்ட நிலையங்கள் 2023-ல் 5896 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேளாண் வானிலை ஆலோசனை சேவைகள் (AAS) 2018 முதல் மாவட்ட அளவிலிருந்து தொகுதி அளவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள அனைத்து விவசாய முக்கியத்துவம் வாய்ந்த 700 மாவட்டங்களுக்கும், சுமார் 3100 வட்டாரங்களுக்கும் வேளாண் வானிலை ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகிறது.

நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கும், ஆழ்கடல் வளங்களை ஆராய்வதற்காக புவி அறிவியல் அமைச்சகம் 2021-ம் ஆண்டில் ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

----

(Release Id: 2003585

ANU/AD/PLM/KPG/KRS


(Release ID: 2003724) Visitor Counter : 70


Read this release in: English , Urdu , Hindi , Telugu