ரெயில்வே அமைச்சகம்

கவச் பயன்பாட்டு நிலவரம்

Posted On: 02 FEB 2024 5:00PM by PIB Chennai

கவச் பாதுகாப்பு உபகரணம் இதுவரை 1465 வழித்தட கிலோமீட்டர் மற்றும் 139 என்ஜின்களில் (மின்சார மல்டிபிள் யூனிட் ரேக்குகள் உட்பட) தென் மத்திய ரயில்வேயால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தில்லி - மும்பை & தில்லி - ஹவுரா வழித்தடங்களுக்கு (சுமார் 3000 ரூட் கி.மீ) கவச் டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கவச் அமைப்பு பாதுகாப்பு ஒருமைப்பாடு நிலை-4-க்கு சான்றளிக்கப்பட்டது. மேலும், முழுப் பிரிவும் முழுமையாகப் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டவுடன், ஆணையிடும் நேரத்தில் சுதந்திரமான பாதுகாப்பு மதிப்பீட்டாளரால் (ஐஎஸ்ஏ) சான்றிதழ் வழங்கப்படுகிறது.

வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே நெடுகிலும் யானைகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களைத் தடுக்கும் வகையில் 48 கி.மீ. நீளத்திற்கு ஆபத்தான பகுதிகள் கண்டறியப்பட்டப் பகுதிகளில் ஊடுருவல் கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தண்டவாளங்களில் யானைகள் அடிக்கடி நடமாடும் இடங்களின் பாதிப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேயில் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

----

(Release ID: 2001908)

ANU/SMB/PKV/KPG/KRS



(Release ID: 2002018) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi