சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தில் ஆயுஷ்மான் பாரத் பிஎம்ஜேஎஒய் திட்டத்திற்கு வரவேற்பு

Posted On: 02 FEB 2024 3:09PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணம் பிரதமரால் 2023, நவம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. அரசின் வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தகுதியான மக்களுக்குத் திட்டத்தின் பலன்களை வழங்குவதும், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு சூழலை வளர்ப்பதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம்  சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாக இந்தப் பயணத்தின் போது தேர்வு செய்யப்பட்டது. பயணத்தின் போது வழங்கப்பட்ட சேவைகளில் ஆயுஷ்மான் அட்டை உருவாக்கமும் ஒன்றாகும்.  பயணத்தின் போது பயனாளிகள் திட்டத்தின் கீழ் சேவைகளைப் பெறும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றப்  பயனாளிகளைத் திட்டத்தின் கீழ் சுகாதார சேவைகளைப் பெற ஊக்குவித்தது.

இந்த இயக்கத்தின் போது, 30.01.2024 நிலவரப்படி, ஆயுஷ்மான் அட்டை உருவாக்கத்திற்காக நாடு முழுவதும் சுமார் 2.78 கோடி சரிபார்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 3.52 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் இயக்கத்தின் போது உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பயனாளிகளை மேம்படுத்தவும் விரிவான ஊடகம் மற்றும் தொலைதூர உத்தி பின்பற்றப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் இதனைத் தெரிவித்தார்.

------

(Release ID: 2001814)

ANU/SMB/BS/KPG/KRS



(Release ID: 2002005) Visitor Counter : 36