சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பட்டியலின வகுப்பினருக்கான கடன் மேம்பாட்டு உத்தரவாதத் திட்டம்
Posted On:
02 FEB 2024 12:15PM by PIB Chennai
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சமூகத்துறை முன்முயற்சிகள் கீழ் 2014-15 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் "பட்டியல் இனத்தவருக்கான கடன் மேம்பாட்டு உத்தரவாதத் திட்டம்" அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ரூ.200 கோடி ஆரம்பகட்ட நிதியுடன் தொடங்கப்பட்டது.
பட்டியலின வகுப்பினருக்கான தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிக்கும் கடன் வழங்கும் வங்கிகளின் (எம்.எல்.ஐ) நிறுவனங்களுக்கு கடன் மேம்பாட்டு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஐஎப்சிஐ நிறுவனம், பட்டியலினத் தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிக்க ஊக்குவிக்கப்படும் எம்.எல்.ஐ.க்களுக்கு உத்தரவாதம் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தனிநபர்கள், தனி உரிமையாளர் நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சங்கங்களுக்கு எம்எல்ஐ-கள் மூலம் காலவரம்புக் கடன் / கூட்டு காலவரம்புக் கடன் / செயல்பாட்டு மூலதன வசதியையும் இந்தத் திட்டத்தில் பெறலாம்.
உத்தரவாத காலம்
அதிகபட்சம் 7 ஆண்டுகள் அல்லது திருப்பிச் செலுத்தும் காலம் எது முந்தையதோ அது. இருப்பினும், ஆரம்பத்தில் கடனுக்கு 1 வருடத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும். வருடாந்திர இடைவெளியில் புதுப்பிக்கப்படும்.
கடன் வழங்கும் நிறுவனங்கள் / வங்கிகள்
பாரத ஸ்டேட் வங்கி, மும்பை
பேங்க் ஆஃப் பரோடா, மும்பை
யூனியன் பாங்க் ஆப் இந்தியா, மும்பை
பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, புனே
ஐடிபிஐ வங்கி, மும்பை
பஞ்சாப் நேஷனல் வங்கி, புதுதில்லி
பாங்க் ஆப் இந்தியா, மும்பை
இந்தியன் வங்கி, சென்னை
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, மும்பை
கனரா வங்கி, பெங்களூரு
பஞ்சாப் & சிந்து வங்கி, புது தில்லி
யூகோ வங்கி, கொல்கத்தா
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை
கர்நாடகா வங்கி, மங்களூர்
தனலக்ஷ்மி வங்கி, திருச்சூர்
பல்லவன் கிராம வங்கி, சேலம் (இப்போது தமிழ்நாடு கிராம வங்கி)
சர்வ ஹர்யா கிராமின் வங்கி, ரோஹ்தக், ஹரியானா
சாதனைகள்
31.1.2024 நிலவரப்படி, ஒட்டுமொத்த அடிப்படையில், ஆதிதிராவிடர் தொழில்முனைவோர்களால் ஊக்குவிக்கப்பட்ட 66 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.72 கோடி வங்கிக் கடனாக 2024-19 நிதியாண்டில் உத்தரவாத காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ரூ. 109 கோடி வழங்கப்பட்டுள்ளது. 4049 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் நேரடி ஊழியர்கள், தொழிலாளர்கள், விநியோகிப்போர், விற்பனையாளர்கள், பிற ஆதரவு சேவைகள் போன்றவை அடங்கும்.
***
ANU/SMB/BS/AG/KV
(Release ID: 2001840)
Visitor Counter : 155