பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியாளர் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் சிங்கப்பூரும் உறுதிபூண்டுள்ளன
Posted On:
31 JAN 2024 3:07PM by PIB Chennai
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் திரு வி.சீனிவாஸ், சிங்கப்பூர் அரசின் பொதுச் சேவைகள் பிரிவின் செயலாளர் திருமதி டான் ஜீ கியோவுடன் காணொலிக் காட்சி வாயிலாக பேச்சு நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் நிர்வாக சீர்த்திருத்தத் துறையைச் சேர்ந் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேற்று (30.01.2024) நடைபெற்ற இந்த பேச்சுவார்தையில், பணியாளர் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இருதரப்புக் கூட்டத்தில் 2024-ம் ஆண்டில் ஒத்துழைப்புக்கான வரையறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், பணியாளர் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் தகவல் பரிமாற்றம், நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையேயான, கூட்டு பணிக்குழுக் கூட்டங்களை உரிய நேரத்தில் நடத்துதல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மின்னணு சேவைகளை மேம்படுத்துதல், மின்-ஆளுகை நடைமுறைகள், ஒருங்கிணைந்த சேவை, குறை தீர்ப்பு நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவை தொடர்பான ஆலோசனைகளும் இதில் இடம்பெற்றன. இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்தியதன் மூலம் "அதிகபட்ச நிர்வாகம் – அரசில் குறைந்தபட்ச தலையீடு " என்ற கொள்கையை அமல்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியா சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பதையும், நீடித்த தீர்வுகளைக் காண்பதிலும், சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அந்நாட்டுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
***
(Release ID:2000833)
ANU/SV/PLM/KPG/KRS
(Release ID: 2000953)
Visitor Counter : 131