இந்திய போட்டிகள் ஆணையம்
சிடிபிகியூ பிரைவேட் ஈக்விட்டி ஆசியா பிரைவேட் லிமிடெட் மூலம் ஏபிஐ ஹோல்டிங்ஸ் லிமிடெட்டில் கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகளின் (பி) (சிசிபிஎஸ் பி) உத்தேசக் கொள்முதலுக்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
31 JAN 2024 10:28AM by PIB Chennai
சிடிபிகியூ பிரைவேட் ஈக்விட்டி ஆசியா பிரைவேட் லிமிடெட் மூலம் ஏபிஐ ஹோல்டிங்ஸ் லிமிடெட்டில் கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமை பங்குகளின் (பி) (சிசிபிஎஸ் பி) உத்தேசக் கொள்முதலுக்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
சிங்கப்பூரில் அமைந்துள்ள சிடிபிகியூ பிரைவேட் ஈக்விட்டி ஆசியா பிரைவேட் லிமிடெட் என்பது சிடிபிகியூ- ன் நேரடி முழுமையான சொந்தத் துணை நிறுவனமாகும். சிடிபிகியூ என்பது ஒரு கனடா நிறுவன நிதியமாகும், இது கனடாவில் பொது, துணைப் பொது ஓய்வூதியம், காப்பீட்டுத் திட்டங்களுக்கான நிதிகளை முதன்மையாக நிர்வகிக்கும் ஒரு நீண்டகால நிறுவன முதலீட்டாளராக செயல்படுகிறது.
ஏபிஐ ஹோல்டிங்ஸ் லிமிடெட் (டார்கெட்), அதன் துணை நிறுவனங்கள் மூலம், (i) மொபைல் செயலி, 'பார்ம் ஈஸி' என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மின்-வணிக சந்தை வாயிலாக சுகாதார சேவைகள் தொடர்பான வணிகத்தை இயக்குவதில் ஈடுபட்டுள்ளது; (ii) மருந்து, ஊட்டச்சத்து மருந்துகளின் விற்பனை, கொள்முதல், அத்தகைய பொருட்களின் சேமிப்பு, மற்றும் பேக்கேஜிங் நடவடிக்கைகளை மேற்கொள்வது; (iii) வாடிக்கையாளர்களுக்கு நோயறிதல், சுகாதார சேவைகளை நேரடியாக, அதற்கு சொந்தமான மற்றும் இயக்கப்படும் ஆய்வகங்கள் / சேகரிப்பு மையங்கள் மூலம் அல்லது மூன்றாம் தரப்பினருடன் துணை ஒப்பந்த ஏற்பாடுகள் மூலம் பங்குதாரர் ஆய்வகங்கள் / சேகரிப்பு மையங்கள் மூலம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2000724
***
ANU/SMB/IR/AG/RR
(Release ID: 2000770)
Visitor Counter : 82