கூட்டுறவு அமைச்சகம்

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாநிலங்களின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் அலுவலகங்களில் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

Posted On: 30 JAN 2024 6:01PM by PIB Chennai

மாநிலங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்கள், வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் அலுவலகங்களில் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, கூட்டுறவு அமைச்சகச் செயலர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், "சஹகார் சே சம்ரிதி" என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் திசையில் இன்று நாம் மற்றொரு படி முன்னோக்கி எடுத்து வைக்கிறோம் என்று திரு அமித் ஷா தனது உரையில் கூறினார். சுதந்திரமான கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியதன் மூலம் கூட்டுறவுகளுடன் தொடர்புடைய மக்களின் நீண்டகால கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் என்று அவர் கூறினார். மோடி அரசு இந்த 10 ஆண்டுகளில், நாட்டின் கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக இரண்டு முக்கியமான விஷயங்களைச் செய்துள்ளார் என்றும் அவர் கூறினார். மோடியின்  தலைமையின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது, இதன் காரணமாக சுமார் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து விடுபட்டு வாழ்க்கத் தரத்தை மேம்படுத்தியுள்ளனர் என்று திரு அமித் ஷா கூறினார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களை சுயவேலைவாய்ப்புடன் இணைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளார் என்று அவர் கூறினார். பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளின் மூலம், வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு மத்திய அரசு அடித்தளம் அமைத்துள்ளது என்று அவர் கூறினார். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா மற்றும் கூட்டுறவு அமைச்சகம், நாட்டின் வளமான கிராமங்களுக்கு அடித்தளமாக இருக்கும் என்றும், வளர்ந்த இந்தியா என்ற யோசனையை அடிமட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.

இன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், டிஜிட்டல் ஒத்துழைப்பு மூலம் கிராமங்களை சென்றடையத் தொடங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார். தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், மாநிலங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றின் கணினிமயமாக்கல் தொடங்கி ஒட்டுமொத்த கூட்டுறவு அமைப்பையும் மோடி அவர்கள் நவீனப்படுத்தியுள்ளார் என்று அவர் கூறினார். இந்த இரண்டு திட்டங்களுக்கும் சுமார் ரூ.225 கோடி செலவாகும் என்றும், திரு அமித் ஷா கூறினார். இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்றும், நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்களை நாடும் விவசாயிகளுக்கு இன்று முதல் ஒரு வசதி தொடங்குகிறது என்றும் அவர் கூறினார்.

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் கணினிமயமாக்கல் திட்டத்தின் கீழ், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1851 வட்டார வளர்ச்சி வங்கி வங்கிகளை கணினிமயமாக்கி, அவற்றை பொதுவான தேசிய மென்பொருள் மூலம் நபார்டு வங்கியுடன் இணைப்பதாகும். பரிவர்த்தனை செலவுகளைக் குறைத்தல், விவசாயிகளுக்கு கடன் விநியோகத்தை எளிதாக்குதல் மற்றும் திட்டங்களின் சிறந்த கண்காணிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

(வெளியீட்டு ஐடி: 2000659)

ANU/SM/BS/KPG/KRS(Release ID: 2000691) Visitor Counter : 43


Read this release in: English , Urdu , Marathi , Assamese