மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் ஆரோவில் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற மாணவர்கள் இரண்டாவது நாளில் உடல் மற்றும் மனதில் அமைதியை வலியுறுத்தி தங்கள் கற்றலைத் தொடர்ந்தனர்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை மாணவர்கள் சந்தித்தனர்

Posted On: 30 JAN 2024 5:17PM by PIB Chennai

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் ஆரோவில் சுற்றுப்பயணத்தின் 2-வது நாளில்பங்கேற்ற மாணவர்கள் உடல் மற்றும் மனதில் அமைதியை மேற்கொண்டு தங்கள் கற்றலைத் தொடர்ந்தனர்அவர்கள், காயத்ரி மந்திரத்தின் ஸ்லோகங்களுடன் தங்களின் அன்றைய நாளைத் தொடங்கினர். மேலும் மனதுக்குள் உள்நோக்கிய பயணம் மற்றும் ஆழ்ந்த அமைதியில் இருப்பது குறித்தும் கற்றுக்கொண்டனர்.

மனதின் இயல்பு பற்றியும்மனதை எவ்வாறு அமைதிப்படுத்துவது என்பது பற்றியும்வெளி உலக செயல்பாடுகளில் ஈடுபடும்போது மென்மையானஅன்பான கவனிப்புடன் முதலில் அமைதியை மனதுக்குள் கொண்டு வருவது பற்றியும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.

மாணவர்களின் கேள்விகள், அவரவர் மனதைப் புரிந்துகொண்டு ஆளுகை செய்ய வேண்டியதன் உண்மையான தேவையை பிரதிபலிப்பதாக இருந்தன. பிறருடன் பழகுதல் மற்றும் தனிப்பட்ட தகவல்தொடர்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு மற்றும் மனதுடன் போராடாமல் இருப்பதற்கான நடைமுறைகள் பற்றியும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.

ஆரோவில்லின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர்கள், மாத்ரி கோயிலைப் பார்வையிட்டனர்

பின்னர், ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுடன் மாணவர்கள் கலந்துரையாடினர்.  அவர் தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் பல்வேறு பதவிகளை வகித்த  நபராக மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.

 

மாணவர்களை தலைவர்களாக இருக்கவும், நட்சத்திரங்களாக இருக்கவும், கடினமாக உழைக்கக்கூடியவர்களாகவும்  , சிறந்ததைச் சிறப்பாகச் செய்யவும் மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.

 

ஒவ்வொருவருக்கும் அவர்கள் காணும் கனவு எதையும் அடையக்கூடிய திறன் உள்ளது, தைரியமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும், நிமிர்ந்து நிற்க வேண்டும், சவால்களை ஏற்றுக்கொள்வது ஆகியவை வெற்றிக்கு முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி கலந்து கொண்டார்.

 

பின்னர் ஆரோவில், சமூக ஒருங்கிணைப்பில் பின்பற்றப்படும் வளர்ச்சி மாதிரியை மாணவர்கள் கற்றறிந்தனர். மிகப்பெரிய சமூக சமையலறையான சூரிய சமையலறை போன்ற சமூகத்தை ஒன்றிணைக்கும் ஆரோவில்லின் பிற முயற்சிகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.

 

அமைதியாக ஓய்வெடுப்பது வேலையின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது, தகவல்தொடர்புகளில் விளைவுகளை  ஏற்படுத்துகிறது என்பதையும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.

 

தேசிய கல்விக் கொள்கை, ஜி-20 தலைவர்கள் பிரகடனம், ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் ஆகிய கருப்பொருள்களுக்கு ஏற்ப கல்வி மற்றும் கலாச்சார சுற்றுப்பயணமாக கல்வி அமைச்சகம் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

 

***

(Release ID: 2000631)

AD/SM/BS/KPG/KRS


(Release ID: 2000690)
Read this release in: English , Urdu , Hindi