பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 30 JAN 2024 3:43PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியில் மேல்நோக்கிய போக்கைத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைப்பதில் நாட்டிற்குப் பெரும் பங்கு உள்ளது என்று அவர் கூறினார்.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உதம்பூரில் (ஜம்மு காஷ்மீர்) நடந்த பொது நிகழ்ச்சியில் பேசினார்.

"2014 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி பதவியேற்றபோது, இந்தியா உலகின் பத்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளாக நம்மை ஆண்ட இங்கிலாந்தை முந்தி 10 ஆண்டுகளுக்குள் நாம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். இந்த ஆண்டு இந்தியா 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்றும், பிரதமர் மோடியின் 3-வது பதவிக்காலத்தில், இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், 2047 ஆம் ஆண்டில் நம்பர் 1 பொருளாதாரமாக மாறும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

2023-24 நிதியாண்டில், உலகப் பொருளாதாரம் 3 சதவீதத்திற்கும் அதிகமாக ஆவதற்குப் போராடினாலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 7 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்தது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நிதித்தொழில்நுட்பப் பொருளாதாரமாக நாம் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

"உலக அளவில் 3-வது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் யூனிகார்ன்களின் தாயகமாக உள்ளது. "2014 ஆம் ஆண்டில் வெறும் 350 புத்தொழில் நிறுவனங்களாக இருந்த இந்தியாவில் ஒன்பது ஆண்டுகளில் 300 மடங்கு அதிகரித்துள்ளன.  பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில் செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா' என்ற தெளிவான அழைப்பை விடுத்து, 2016-ம் ஆண்டில் சிறப்புப் புத்தொழில் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின், இன்று நம்மிடம் 1,30,000-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன, மேலும் 110-க்கும் அதிகமான யூனிகார்ன்கள் உள்ளன, "என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

----

(Release ID: 2000586)

ANU/SMB/BS/KPG/KRS

 


(Release ID: 2000649) Visitor Counter : 141


Read this release in: English , Urdu , Hindi , Marathi