எரிசக்தி அமைச்சகம்
பசுமை ஹைட்ரஜன் திட்டங்களை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிர அரசுடன், பசுமை எரிசக்தி நிறுவனம் (என்ஜிஇஎல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது; ஐந்து ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது
Posted On:
30 JAN 2024 12:18PM by PIB Chennai
தேசிய அனல்மின் கழகத்தின் பசுமை எரிசக்தி நிறுவனம் (என்ஜிஇஎல்) ஆண்டுக்கு 1 மில்லியன் டன் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் துணைப் பொருட்கள் (பசுமை அம்மோனியா, கிரீன் மெத்தனால்) மேம்பாட்டிற்காக மகாராஷ்டிர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் 2 ஜிகாவாட் பம்ப் செய்யப்பட்ட, சேமித்து வைக்கும் வசதி கொண்ட திட்டங்கள் மற்றும் மாநிலத்தில் 5 ஜிகாவாட் வரை சேமிப்பு வசதி கொண்ட அல்லது சேமிப்பு வசதி இல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மகாராஷ்டிர அரசின் பசுமை முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சுமார் ரூ.80,000 கோடி முதலீட்டை எதிர்பார்க்கிறது.
2024 ஜனவரி 29 அன்று மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் என்ஜிஇஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு மோஹித் பார்கவா மற்றும் மகாராஷ்டிர அரசின் எரிசக்தித் துறை துணைச் செயலாளர் திரு நாராயண் காரத் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
2032-ம் ஆண்டுக்குள் 60 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க என்டிபிசி திட்டமிட்டுள்ளது.
என்ஜிஇஎல் என்பது என்டிபிசியின் துணை நிறுவனமாகும். மேலும் 3.4 ஜிகாவாட் மற்றும் 26 ஜிகாவாட் செயல்பாட்டு திறன் கொண்ட என்டிபிசியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
----
(Release ID: 2000513)
ANU/SMB/BS/KPG/KRS
(Release ID: 2000643)
Visitor Counter : 101