வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இரட்டை பயன்பாட்டு பொருட்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தின் வர்த்தக முறை குறித்து ஜனவரி 30 அன்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் விவாதிக்கிறது
Posted On:
28 JAN 2024 12:45PM by PIB Chennai
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், வர்த்தகத் துறை வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து உத்திப்பூர்வமான வர்த்தக கட்டுப்பாடுகள் மீதான தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இது இந்தியாவின் உத்திப்பூர்வமான வர்த்தக கட்டுப்பாடு அமைப்பு மற்றும் அதன் சர்வதேச சிறந்த நடைமுறைகள் மீது கவனம் செலுத்துகிறது. இரட்டை பயன்பாட்டு (தொழில்துறை மற்றும் இராணுவ) பொருட்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஏற்றுமதி தொடர்பான இணக்கத்தை உறுதி செய்கிறது.
இந்த மாநாடு 2024 ஜனவரி 30அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும். இந்த மாநாட்டில் பங்கேற்க டிஜிஎஃப்டி தனது இணையதளம் மற்றும் பிற தொடர்புடைய தளங்கள் மூலம் ஆர்வமுள்ள அனைத்து தொழில்துறை மற்றும் பிற பங்கெடுப்பாளர்கள் பதிவு செய்யலாம்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 1540 கமிட்டியின் தலைவர், ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பேச்சாளர்கள், வர்த்தக செயலாளர், சிபிஐசி உறுப்பினர் (சுங்கம்), டிஜிஎஃப்டியின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள் இந்த மாநாட்டில் தொழில்துறை மற்றும் பிற பங்கெடுப்பாளர்களிடையே உரையாற்றுவார்கள். இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் உத்திப்பூர்வ வர்த்தக கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தொழில்துறையின் ஒரு பகுதியாக இருக்கும் அரசின் பல்வேறு துறைகள் / அமைப்புகளின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு இரசாயனங்கள், உயிரினங்கள், பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் (ஸ்கோமெட்), பாதுகாப்பு, விண்வெளி (ட்ரோன்கள் / யுஏவிகளை உள்ளடக்கியது), மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு, தகவல் பாதுகாப்பு போன்றவை மற்றும் தொடர்புடைய மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இந்தியாவின் ஸ்கோமெட் பட்டியலின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகளில் கையாளுபவர்களுக்கு குறிப்பாக தொழில்துறையை அணுகுவதில் இந்த மாநாடு முக்கியமாக கவனம் செலுத்துகிறது.
இந்த மாநாட்டில் பல்வேறு தொழில்துறை தலைவர்களும் இரட்டை பயன்பாட்டு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஏற்றுமதி தொடர்பான தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். நாள் முழுவதும் நடைபெறும் இந்த மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ள கருப்பொருள் அமர்வுகள், சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு, ஸ்கோமெட் கொள்கை மற்றும் உரிம செயல்முறைகளை ஒழுங்குபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அமலாக்க வழிமுறை மற்றும் விநியோக சங்கிலி இணக்க திட்டங்கள் உள்ளிட்ட இந்தியாவின் உத்திப்பூர்வ வர்த்தக கட்டுப்பாட்டு அமைப்பின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தும்.
இந்தியாவின் உத்திப்பூர்வ வர்த்தக கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியாகவும், சர்வதேச மாநாடுகள், வழிமுறைகள் மற்றும் ஆட்சிகளின் தொடர்புடைய கட்டுப்பாட்டு பட்டியல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளுக்கு இணங்கவும், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் டி.ஜி.எஃப்.டி ஆல் அறிவிக்கப்பட்ட ஸ்காமெட் பட்டியலின் கீழ் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இரட்டை பயன்பாட்டு பொருட்கள், அணுசக்தி தொடர்பான பொருட்கள் மற்றும் இராணுவ பொருட்களின் ஏற்றுமதியை இந்தியா ஒழுங்குபடுத்துகிறது.
*****
ANU/AD/BS/DL
(Release ID: 2000245)
Visitor Counter : 114