குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 JAN 2024 3:06PM by PIB Chennai

நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி நாட்டுமக்கள் அனைவருக்கும் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

75 ஆண்டுகளுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை  நிறுவியவர்கள் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை உலகின் மிகப்பெரிய, அனைத்தையும் உள்ளடக்கிய ஜனநாயகத்தின் வழிகாட்டும் கொள்கைகளாக இருக்கும் என்று கனவு கண்டதாக கூறியுள்ளார். இந்த நாளில், நமது குடியரசின் அமிர்த காலத்தில், பாரதத்தை மனிதகுலத்திற்கான நம்பிக்கை கலங்கரை விளக்கமாக வடிவமைத்த போராட்டங்கள், தியாகங்கள், சாதனைகளை நாம் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

நமது சாதனைகளைக் கொண்டாடும் வேளையில், நமது குடியரசின் இந்த 75-வது ஆண்டு விழாவில், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளை கடைப்பிடிக்கவும், எப்போதும் வலுவான, வளமான பாரதத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படவும் நாம் உறுதியேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

***

ANU/AD/IR/RS/RR


(रिलीज़ आईडी: 1999602) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi