இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவற்றின் இணைப்புக்கு இந்தியப் போட்டிகள் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல்

प्रविष्टि तिथि: 24 JAN 2024 4:12PM by PIB Chennai

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவற்றின் இணைப்புக்கு இந்தியப் போட்டிகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இணைக்கப்பட்ட பின்னர், ஏயூ வங்கி என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும். முன்மொழியப்பட்ட இணைப்புக்குப் பிறகு, இணைக்கப்பட்ட நிறுவனத்தில் ஃபின்கேரின் பங்குதாரர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்படும்.

ஏயூ என்பது தனிப்பட்ட மற்றும் வர்த்தக வங்கி சேவைகளான வைப்பு நிதி, கடன்கள் மற்றும் டெபிட் மற்றும் கடன் அட்டை சேவைகள், வங்கி மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்கும்.

ஃபின்கேர் வங்கி நிறுவனம் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, கடன் போன்ற சேவைகள், கடன்கள் உட்பட டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்குகிறது. காப்பீட்டு சேவைகளையும் ஃபின்கேர் வழங்குகிறது.

***

ANU/SMB/BS/RS/KRS


(रिलीज़ आईडी: 1999249) आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी