பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஆப்பிரிக்க பிராந்தியத்தின் அரசு ஊழியர்களுக்கான பொதுக் கொள்கை மற்றும் ஆளுமை குறித்த இரண்டு வார தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் முசோரியில் தொடங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
23 JAN 2024 3:20PM by PIB Chennai
இந்திய அரசின் உயர்மட்ட தன்னாட்சி நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG), ஆப்பிரிக்க பிராந்தியத்தின் அரசு ஊழியர்களுக்கான பொதுக் கொள்கை மற்றும் ஆளுமை குறித்த இரண்டு வார தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தை 22-01-2024 பிற்பகல் தொடங்கியது. எரித்திரியா, கென்யா, எத்தியோப்பியா, தான்சானியா, காம்பியா, எஸ்வாட்னி ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த 36 மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
தொடக்க அமர்வில் டிஏஆர்பிஜி செயலாளர் மற்றும் என்சிஜிஜி தலைமை இயக்குநர் திரு வி. ஸ்ரீனிவாஸ் உரையாற்றினார். வி.ஸ்ரீனிவாஸ் தனது உரையில், பங்கேற்கும் நாடுகளின் அமைச்சகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டத்தை கவனமாக தொகுத்து வழங்குவதை எடுத்துரைத்தார். நில மேலாண்மை, நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நகர்ப்புற நில மேலாண்மை ஆகியவற்றில் SVAMITVA திட்டம், கிராமப்புற சொத்து கணக்கெடுப்பு திட்டங்கள் மற்றும் நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், பிரதமரின் மகளிர் சக்தி போன்றவற்றை உள்ளடக்கியதாக திறன் மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு கவனம் செலுத்தும் விரிவுரைகளை கொண்டதாக உள்ளது. டிஜிட்டல் மாற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய வி.ஸ்ரீனிவாஸ், மக்களை அரசுடன் நெருக்கமாகக் கொண்டுவருவதில் தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துரைத்தார். "அதிகபட்ச ஆளுமை, குறைந்தபட்ச அரசு" என்ற இந்தியாவின் கொள்கைப் பொன்மொழி, மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களையும் அரசையும் நெருக்கமாக கொண்டு வர நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது. மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் குறைகளை திறம்பட களைதல், மின்னணு சேவைகளில் கவனம் செலுத்தும் செயலக சீர்திருத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சேவை இணையதளங்கள் மூலம் சேவை வழங்கலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் 16,000-க்கும் மேற்பட்ட சேவைகளை இ-சேவை முறையில் இந்தியா வழங்கி வருகிறது. திறன் மேம்பாட்டுத் திட்டம், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றம், ஊழலற்ற நிர்வாகம், நிர்வாகத்தில் நெறிமுறைகள் ஆகியவற்றை பிரதிநிதிகளுக்கு முன்வைக்க முயல்கிறது.
காம்பியாவின் துணை தூதர் திரு லாமின் இ சிங்கடே, காம்பியா, இந்தியா மற்றும் என்.சி.ஜி.ஜி இடையேயான அறிவு பகிர்வு ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். இன்றைய உலகில் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சிறந்த ஆளுகைக்கான தேசிய மையத்தின் பாடநெறி ஒருங்கிணைப்பாளரும் இணை பேராசிரியருமான டாக்டர் ஏ.பி.சிங், இரண்டு வார திட்டத்தின் விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார், உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளை விவரித்தார். இந்த திட்டத்தில் ஆளுமை முன்னுதாரணங்கள், வீட்டுவசதி துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், நல்ல நிர்வாகத்திற்கான ஆதார், நில ஆவணங்கள் நவீனமயமாக்கல், அரசு கொள்முதலில் வெளிப்படைத்தன்மை, கிராமப்புற சொத்து கணக்கெடுப்பு திட்டங்கள், பொது-தனியார் கூட்டாண்மை, பயனுள்ள அலுவலக நிர்வாகம், பருவநிலை மாற்ற கொள்கைகள், நிலையான வளர்ச்சி இலக்குகள், இந்தியாவில் விவசாயம், பொதுக் கொள்கை முன்னோக்குகள் மற்றும் டி.எம்.ஆர்.சி, எய்ம்ஸ், பிரதமர் சங்கராலயா, மற்றும் தாஜ்மஹால் வருகை குறித்த இந்தியா-ஆப்பிரிக்க உறவு குறித்தும் குறிப்பிட்டார்.
திறன் மேம்பாட்டு திட்டத்தை பாடநெறி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.பி.சிங், இணை பாடநெறி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முகேஷ் பண்டாரி, திட்ட உதவியாளர் ஸ்ரீ சஞ்சய் தத் பந்த் மற்றும் என்.சி.ஜி.ஜியின் அர்ப்பணிப்புள்ள திறன் வளர்ப்பு குழு மேற்பார்வையிடும்.
***
(Release ID: 1998796)
ANU/SM/BS/RS/KRS
(रिलीज़ आईडी: 1998926)
आगंतुक पटल : 164