நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 12.22 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை தில்லி சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்

Posted On: 21 JAN 2024 3:22PM by PIB Chennai

சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், தில்லி சுங்கத் துறையினர் 2024 ஜனவரி 20 மற்றும் 21 தேதிகளில் மேற்கொண்ட சோதனைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.  மொத்தம் 12.22 லட்சம் எண்ணிக்கையிலான இஎஸ்எஸ்இ, மோண்ட், டன்ஹில், டேவிடாஃப், குடாங் கரம், பிளாட்டினம் செவன் போன்ற பிராண்ட் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  முதற்கட்ட தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தில்லி சுங்கத் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

கத்ரா பரியான், நயபன்ஸ், பகுதிகளில் இரண்டு கடைகள் மற்றும் மூன்று கிடங்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்தக் கடைகள் மற்றும் கிடங்குகளில் பல்வேறு பிராண்டுகளின் வெளிநாட்டு சிகரெட்டுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இந்த சிகரெட் பாக்கெட்டுகளில் அரசால் குறிப்பிடப்பட்ட சட்டரீதியான சுகாதார எச்சரிக்கைகள் எதுவும் இல்லை. இந்த சிகரெட்டுகள் சட்டவிரோதமாக, சுங்க வரியை தவிர்த்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டு சந்தையில் விற்பக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த வழக்கில் விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Release ID: 1998347

*****

ANU/PKV/PLM/KRS

 


(Release ID: 1998381) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Hindi , Telugu