உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்துக் கண்காட்சி-சிறகுகள் இந்தியா 2024-ஐ மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
Posted On:
18 JAN 2024 3:03PM by PIB Chennai
ஆசியாவின் மிகப்பெரிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் நான்கு நாள் "விங்ஸ் இந்தியா 24" திருவிழா ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. "அமிர்த காலத்தில் இந்தியாவை உலகுடன் இணைத்தல்: இந்திய சிவில் விமானப் போக்குவரத்து @ 2047 -க்கான தளத்தை அமைத்தல்". என்ற கருப்பொருளில் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் நடைபெற்ற உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகுத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். "வசுதைவ குடும்பகம்" என்ற தத்துவம் சிவில் விமானப் போக்குவரத்தின் நோக்கங்களை உண்மையிலேயே எடுத்துக்காட்டுகிறது என்றும், விமானப் போக்குவரத்துத்துறை அதே நேரத்தில் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களை நிவர்த்தி செய்கிறது" என்று தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகளில் விமானப் போக்குவரத்துத் துறையும் ஒன்று என்றும், வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் அதன் வளர்ச்சி நம்பமுடியாததாக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார். சுற்றுலா, வர்த்தகம், போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், ஆகியவற்றால் விமானப் போக்குவரத்துத்துறையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க பொருளாதார, சமூக நன்மைகளை வழங்குகிறது என்று அவர் கூறினார் .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1997295
***
ANU/PKV/IR/AG/KV
(Release ID: 1997427)
Visitor Counter : 145