விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளின் நலனை உறுதி செய்ய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


2013-14 ஆம் ஆண்டில் 27,662.67 கோடி ரூபாயாக இருந்த வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 2023-24 ஆம் ஆண்டில் 1,25,035.79 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது

Posted On: 18 JAN 2024 2:07PM by PIB Chennai

'கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் அமைச்சகம் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் கோடி ரூாபயை  திரும்ப ஒப்படைத்துவிட்டது' என்ற  தலைப்பில் ஒரு செய்தித்தாளில் கட்டுரை வெளிவந்துள்ளது. அமைச்சகத்திடம் எந்த விளக்கமும் கேட்காமல், இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் துறையில் அரசின் சாதனைகளை இந்த கட்டுரை முன்னிலைப்படுத்தவில்லை.

உண்மையில், விவசாயிகளின் நலனை உறுதி செய்ய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 27,662.67 கோடி ரூபாயாக இருந்த நிதி-ஒதுக்கீடு 2023-24 ஆம் ஆண்டில் 1,25,035.79 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 80% முதல் 85% வரை பங்களிக்கும் மூன்று முக்கிய மத்திய துறை திட்டங்கள் உள்ளன. பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியுதவித் திட்டத்தில் 30.11.2023 நிலவரப்படி 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள்  பயன்பெறுகின்றனர். நேரடி பரிமாற்றம் (DBT) மூலம் இதுவரை ரூ.2.81 லட்சம் கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம்  (PMFBY) 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் 49.44 கோடி விவசாயிகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14.06 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.1,46,664 கோடிக்கு மேல் காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர். 2013-14-ம் ஆண்டில் 7.3 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வேளாண் துறைக்கான நிறுவனக் கடன் 2022-23-ம் ஆண்டில் 21.55 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கே.சி.சி மூலம் சலுகை கடனின் பயன் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று முக்கிய மத்திய அரசுத் திட்டங்களும் தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

***

ANU/SM/PLM/RS/KV

 


(Release ID: 1997320) Visitor Counter : 114