அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023 தொடக்க நிகழ்ச்சி
அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகளின் வலிமையுடன் உலகப் புகழ் பெற்ற நாடாக இந்தியா மாறியுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர்
Posted On:
17 JAN 2024 5:03PM by PIB Chennai
"இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023, மூன்று முக்கிய காரணங்களுக்காக கொண்டாடப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நிலவின் தென் துருவ பகுதியில் இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது, கொவிட் தடுப்பூசி மேம்பாடு, அரோமா இயக்கம் ஆகியவை இந்த 3 காரணங்கள் என்று அவர் தெரிவித்தார். ஃபரிதாபாதில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையம் கூட்டு வளாகத்தில், இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023-ன் தொடக்க விழாவில் அவர் இதனைக் குறிப்பிட்டார். குறுகிய காலத்தில் வெற்றிகரமான டி.என்.ஏ தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு இந்தியா என்று அவர் மேலும் கூறினார். உலகின் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் நாம் இப்போது ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளோம் என்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் வலிமையால் உலகப் புகழ் பெற்ற நாடாக இந்தியா மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக, பிரச்சினைகளுக்கான தீர்வுகள், இந்திய ஆராய்ச்சிக்கான இந்திய தரவு, இந்திய மக்களுக்கான இந்திய மருத்துவர்கள் மற்றும் பொது-தனியார் பங்கேற்பு ஆகியவற்றில் நாங்கள் இப்போது கவனம் செலுத்துகிறோம் என்று கூறினார்.
----
(Release ID: 1996983)
ANU/SM/IR/KPG/KRS
(Release ID: 1997059)