பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Posted On: 16 JAN 2024 5:25PM by PIB Chennai

அரசு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரியில் நடந்த "வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண" நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சிறிய பயன்களுக்காக கூட ஏழை குடிமகன் மீண்டும் மீண்டும் ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்த சிரமமத்தை எதிர்கொண்டதாகக் கூறினார்.

ஆனால் தற்போது, இச்சிரமத்திற்கு எதிர்மறையாக  பிரதமர் திரு நரேந்திர மோடி மாற்றியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.  அனைத்து பயனாளிகளுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் செல்வதாக  அமைச்சர் கூறினார்.

பிரதமரின் தொலைநோக்கு பார்வை காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று கூறிய அவர், ஒவ்வொரு நலத்திட்டங்களும் சாமானிய மக்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

"கடந்த காலங்களில் நீதி மறுக்கப்பட்ட இடங்களில் நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

சாதி, மதம் அல்லது வாக்குகளைக் கருத்தில் கொள்ளாமல் கடைக்கோடியில் தேவை உள்ள நபர்களை நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

----

(Release ID: 1996678)

ANU/SMB/IR/KPG/KRS


(Release ID: 1996748) Visitor Counter : 179
Read this release in: English , Urdu , Hindi , Punjabi