அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (ஐ.ஐ.எஸ்.எஃப்) 2023 அறிவியல் இலக்கிய விழாவான விஞ்ஞானிகாவை வழங்குகிறது
प्रविष्टि तिथि:
14 JAN 2024 2:29PM by PIB Chennai
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, (ஐ.ஐ.எஸ்.எஃப் ) 2023 இந்தியாவின் அறிவியல் திறனை வெளிப்படுத்துவதையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைத் திறம்படத் தொடர்புகொள்வதற்கு விரிவான வரைபடத்தை வகுப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு விஞ்ஞானிகா அறிவியல் இலக்கியத் திருவிழாவை வழங்குகிறது. ஹரியானாவின் ஃபரிதாபாதில் உள்ள பிராந்திய உயிரி தொழில்நுட்ப மையத்தில் மாற்றம்தரும் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் 2024 ஜனவரி 18, 19ஆகிய தேதிகளில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை-இந்தியா மற்றும் விஞ்ஞான் பாரதி ஆகியவை ஒருங்கிணைப்பு அமைப்புகளாகும்.
ஜனவரி 18, 2024 அன்று திட்டமிடப்பட்ட அமர்வுகளில் "இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மக்கள் தொடர்பு" என்ற தலைப்பிலான அறிவியல் அமர்வும் அடங்கும். மும்பை ஐஐடி முதுநிலை பேராசிரியர் பி.என்.ஜெகதாப் தலைமை வகிக்கிறார். மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் தினகர் எம். சாலுங்கே, உள்ளிட்டோர் பகேர்கின்றனர்.
"இந்திய மொழிகளில் அறிவியலை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெறும். இதில் இந்தி, பஞ்சாபி, மணிப்பூரி, தமிழ், அசாமி, மலையாளம் ஆகிய மொழிகளில் அறிவியல் தகவல்தொடர்பாளர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
"இந்தியாவில் அறிவியல் தகவல்தொடர்பு: தற்போதைய போக்குகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்" என்ற தலைப்பில் அறிவியல் அமர்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தை சேர்ந்த டாக்டர் பி.கே. ஜோஷி அமர்வுக்கு தலைமை தாங்குகிறார்.
அடுத்து கலை மற்றும் அறிவியல் சங்கமத்துடன் கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஒரு அறிவியல் நாடகமும் அடங்கும்.
2 ஆம்நாள் (19 ஜனவரி 2024) முதல் அமர்வில் குழு விவாதமும், பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் விநாடி வினா போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நாளில் மற்றொரு குழு விவாதம் "பாரம்பரிய அறிவு ஆராய்ச்சி மற்றும் தகவல்தொடர்பில் சவால்கள்" என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது. டெக்கான் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்த் ஷிண்டே தலைமை வகிக்கிறார். தேசிய பால பவனின் முன்னாள் இயக்குநர் டாக்டர் மது பந்த் தலைமையில் விஞ்ஞான் கவி சம்மேளனமும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாலையில் "வசுதைவ குடும்பகத்திற்கான அறிவியல் தொடர்பு" என்ற தலைப்பில் சிறப்பு அமர்வும், நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு மார்க் பிரென்ஸ்கி, யயாசான் இனோவாசி மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷர்மிளா பின்டி முகமத் சாலே ஆகியோர் இந்த அமர்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****
ANU/AD/SMB/DL
(रिलीज़ आईडी: 1996085)
आगंतुक पटल : 130