பாதுகாப்பு அமைச்சகம்
எல்லைச் சாலைகள் அமைப்பால் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஒப்புதல்
Posted On:
13 JAN 2024 10:03AM by PIB Chennai
எல்லைச் சாலைகள் அமைப்பு / பொது ரிசர்வ் பொறியாளர் படையால் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான(சி.பி.எல்) குழு காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இத்திட்டம் தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்கள் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு / நெருங்கிய உறவினருக்கு ரூ .10 லட்சம் காப்பீடாக வழங்கும்.
அபாயகரமான வேலைத் தளங்கள், மோசமான வானிலை, தொழில்சார் அபாயங்கள் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களின் உயிர் ஆபத்தைக் கருத்தில் கொண்டும், அவர்களின் வேலையின்போது ஏற்பட்ட / புகாரளிக்கப்பட்ட இறப்புகளைக் கருத்தில் கொண்டும், மனிதாபிமான அடிப்படையில் காப்பீட்டு பாதுகாப்பை வழங்குவது தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்த மன உறுதியை அதிகரிக்கும்.
இந்தத் திட்டம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியும் தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்புரியும் நடவடிக்கையாக செயல்படும். இது அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நீண்டகாலத்துக்குப் பாதுகாக்கும்.
சி.பி.எல்.களின் மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார் என்பது நினைவிருக்கலாம். இவற்றில் பின்வருவனவும் அடங்கும்:
உடல்களைப் பாதுகாத்தல், எடுத்துச் செல்லுதல் மற்றும் பணியாளரின் போக்குவரத்துச் செலவுக்கான உரிமை.
ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்வு,
உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடி உதவியாக ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்.
----
ANU/PKV/BS/DL
(Release ID: 1995798)
Visitor Counter : 120