குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இடுகை இடப்பட்ட நாள்:
12 JAN 2024 6:51PM by PIB Chennai
லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் மகிழ்ச்சியான தருணத்தில், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
“நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைகள் அறுவடைப் பருவத்தின் கொண்டாட்டத்தைக் குறிக்கின்றன, நன்றி உணர்வைப் பிரதிபலிக்கின்றன. இயற்கை அன்னை நமக்கு அளித்த செழிப்பை நினைத்து மகிழ நாம் ஒன்று கூடும்போது, இந்தப் பண்டிகைகள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாரதத்தின் கட்டமைப்பில் இருக்கின்ற உள்ளார்ந்த உணர்வையும் பிரதிபலிக்கின்றன.
இந்தப் பண்டிகைகளின் ஆன்மா நம் வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை நிரப்பட்டும்!” என்றும் குடியரசு துணைத்தலைவர் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 1995635)
ANU/AD/SMB/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1995682)
வருகையாளர் எண்ணிக்கை : 182