புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2023 டிசம்பரில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.69 சதவீதமாக இருந்தது
Posted On:
12 JAN 2024 5:30PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2012=100 அடிப்படையில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் மற்றும் 2023 டிசம்பர் மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறியீட்டை வெளியிட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் இருந்து விலை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 2023, டிசம்பர் மாதத்தில், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு 99.9% கிராமங்கள் மற்றும் 98.6% நகர்ப்புற சந்தைகளிலிருந்து விலைகளை சேகரித்தது. அதே நேரத்தில் அதில் தெரிவிக்கப்பட்ட சந்தை வாரியான விலைகள் கிராமப்புறங்களுக்கு 90.0% மற்றும் நகர்ப்புறங்களுக்கு 93.7% ஆகும்.
***
ANU/AD/SMB/RS/KRS
(Release ID: 1995645)
Visitor Counter : 115