பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அயோத்தியில் ஸ்ரீ ராமரின் பிரதிஷ்டை குறித்துப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியின் தமிழாக்கம்

Posted On: 12 JAN 2024 9:52AM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, ராம் ராம்!

தெய்வீக ஆசீர்வாதத்தால் வாழ்க்கையின் சில தருணங்கள் சிறப்பாக மாறும்.

இன்று அனைத்து இந்தியர்களுக்கும், உலகெங்கிலும் பரவியுள்ள ராமரின் பக்தர்களுக்கும் ஒரு புனிதமான தருணம்! எங்கு பார்த்தாலும் ராமர் மீது பக்தி பொங்கும் சூழல்! ராமரின் இனிமையான கோஷங்கள், எல்லா திசைகளிலும் ராம பஜனைகளின் நேர்த்தியான அழகு! அந்த வரலாற்று சிறப்புமிக்க புனிதத் தருணமான ஜனவரி 22-ம் தேதியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்த மங்களகரமான நிகழ்வைக் காண நான் என்னை அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். கற்பனைக்கு அப்பாற்பட்ட தருணங்களை நான் அனுபவிக்கும் நேரம் இது.

நான் உணர்ச்சிவசப்படுகிறேன், உணர்ச்சிகளால் மூழ்கியிருக்கிறேன்! என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு தனித்துவமான உணர்ச்சியையும், பக்தியையும் நான் அனுபவிக்கிறேன். எனக்குள் இருக்கும் இந்த உணர்வுபூர்வமான பயணம் ஒரு வெளிப்பாடு அல்ல, அனுபவத்திற்கான வாய்ப்பு. எனக்கு விருப்பம் உள்ளபோதும், அதன் ஆழத்தையும், விரிவையும், தீவிரத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என் நிலைமையை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

பல தலைமுறைகள், தங்கள் இதயத்தில் பல ஆண்டுகளாக ஒரு தீர்மானமாக வைத்திருந்த கனவு. அதன் நிறைவேற்றத்தில் கலந்து கொள்வதால் நான் அதிர்ஷ்டசாலி. கடவுள் என்னை அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாக ஆக்கியுள்ளார்.

இது  ஒரு பெரிய பொறுப்பு. நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, 'யாகம்' மற்றும் கடவுள் வழிபாடு நமக்குள் தெய்வீக உணர்வை எழுப்ப வேண்டும். இதற்காக, சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் மற்றும் கடுமையான விதிகளைச் சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. எனவே, இந்த ஆன்மீகப் பயணத்தில் சில துறவிகள் மற்றும் மகான்களிடமிருந்து எனக்குக் கிடைத்த வழிகாட்டுதலின் அடிப்படையில்... 'யம-நியமம்' (தார்மீக மற்றும் நெறிமுறை நடத்தையின் கோட்பாடுகள்) அடிப்படையில், இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு விரத அனுஷ்டிப்பைத் தொடங்குகிறேன்.

இந்தப் புனிதமான தருணத்தில், நான் கடவுளின் பாதங்களில் பிரார்த்தனை செய்கிறேன்... முனிவர்கள், துறவிகள், தியான ஆத்மாக்களின் நற்பண்புகள் எனக்கு நினைவில் உள்ளன... என் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் குறைபாடின்றி என்னை ஆசீர்வதிக்குமாறு கடவுளின் வடிவமான மக்களை நான் பிரார்த்திக்கிறேன்.

நண்பர்களே,

புனித இடமான நாசிக் தாம் பஞ்சவடியில் இருந்து எனது 11 நாள் விரத அனுசரிப்பைத் தொடங்குவது எனது பாக்கியம். ராமர் கணிசமான நேரம் செலவிட்ட புண்ணிய பூமி இந்தப் பஞ்சவடி.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று எனக்கு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பாரதத்தின் ஆன்மாவுக்கு புத்துயிர் அளித்தவர் சுவாமி விவேகானந்தர். இன்று, அதே தன்னம்பிக்கை நம் அடையாளத்தை பிரதிபலிக்கும் பிரமாண்டமான ராமர் கோயிலாக அனைவரின் முன்பும் உள்ளது.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் வடிவத்தில் ஒரு சிறந்த மனிதரைப் பெற்றெடுத்த மாதா ஜீஜாபாயின் பிறந்த நாள் இந்தப் புனிதமான நாளில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று நமது பாரதத்தை நாம் காணும் அசைக்க முடியாத வடிவம், மாதா ஜீஜாபாயின் மகத்தான பங்களிப்பால் கணிசமாகத் தாக்கத்தைப் பெற்றுள்ளது.

நண்பர்களே,

மாதா ஜீஜாபாயின் நல்ல நினைவுகளை நான் நினைவுபடுத்தும்போது, அது இயற்கையாகவே என் சொந்தத் தாயின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. என் தாயார் தனது வாழ்நாளின் இறுதி வரை சீதா-ராமரின் நாமத்தை உச்சரித்தவர்.

நண்பர்களே,

குடமுழுக்கு நல்ல தருணம்...

உயிரற்ற படைப்பின் உணர்வுபூர்வமான தருணம்...

ஆன்மீக அனுபவத்திற்கான வாய்ப்பு...

கருவறையில், அந்தக் கணத்தில் என்ன அதிசயங்கள் காத்திருக்கின்றன...!!

நண்பர்களே,

உடலின் வடிவத்தில் அந்தப் புனிதமான தருணத்திற்கு நான் உண்மையில் சாட்சியாக இருப்பேன், 1.4 பில்லியன் இந்தியர்கள் என் மனதிலும் என் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் என்னுடன் இருப்பார்கள். நீ என்னுடன் இருப்பாய்... ராம பக்தர் ஒவ்வொருவரும் என்னுடன் இருப்பார்கள். அந்த உணர்வுபூர்வமான தருணம் நம் அனைவருக்கும் பகிரப்பட்ட அனுபவமாக இருக்கும். ராமர் கோயிலுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த எண்ணற்ற ஆளுமைகளிடமிருந்து உத்வேகம் பெற்று நான் அங்கு செல்வேன்.

தியாகம் மற்றும் தவத்தின் சின்னங்கள்...

500 வருட பொறுமை...

பொறுமையின் சகாப்தம்...

தியாகத்திற்கும் தவத்திற்கும் எண்ணற்ற உதாரணங்கள்...

நன்கொடையாளர்களின் கதைகள்... தியாகக் கதைகள்...

பலரின் பெயர்கள் தெரியவில்லை, இருப்பினும் அவர்களின் வாழ்க்கைக்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது - ராமர் கோயிலின் அற்புதமான கட்டுமானம். எண்ணற்ற நபர்களின் நினைவுகள் என்னுடன் இருக்கும்.

அந்தத் தருணத்தில் 1.4 பில்லியன் நாட்டுமக்கள் தங்கள் இதயங்களிலிருந்து என்னுடன் இணைவார்கள். உங்கள் சக்தியைச் சுமந்தபடி நான் கருவறைக்குள் நுழையும்போது, நான் தனியாக இல்லை. நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்வேன்.

நண்பர்களே, இந்த 11 நாட்கள் எனக்கு ஒரு தனிப்பட்ட அனுசரிப்பாக இருக்கும். ஆனால் எனது உணர்ச்சிகள் முழு உலகத்துடனும் உள்ளன. நீங்களும் உங்கள் இதயத்திலிருந்து என்னுடன் இணைந்திருக்க பிரார்த்திக்கிறேன்.

ராம் லல்லாவின் காலடியில் எனக்குள் எதிரொலிக்கும் அதே பக்தியுடன் உங்கள் உணர்வுகளைச் சமர்ப்பிப்பேன்.

நண்பர்களே,

கடவுள் உருவமற்றவர் என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், கடவுள், அவரது உடல் வடிவத்தில் கூட, நமது ஆன்மீகப் பயணத்திற்கு சக்தி அளிக்கிறார். மக்கள் வடிவில் கடவுள் இருப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். அதே மக்கள், கடவுளின் வடிவத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஆசீர்வாதங்களைப் பொழியும்போது, நானும் ஒரு புதிய ஆற்றலை அனுபவிக்கிறேன். இன்று உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன். எனவே, உங்கள் உணர்வுகளை வார்த்தைகளிலும், எழுத்திலும் வெளிப்படுத்தி, என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். உங்கள் ஆசீர்வாதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு வார்த்தை அல்ல, ஒரு மந்திரம். அது நிச்சயம் மந்திரத்தின் சக்தியாக செயல்படும். நமோ செயலி மூலம் உங்கள் வார்த்தைகள் மற்றும் உணர்ச்சிகளுடன் நேரடியாக என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

நாம் அனைவரும் ராமர் மீதான பக்தியில் மூழ்கிடுவோம். இந்த உணர்வுடன், ராம பக்தர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

ஜெய் சியா ராம்

ஜெய் சியா ராம்

ஜெய் சியா ராம்

***

(Release ID: 1995395)

ANU/PKV/SMB/RS/KRS


(Release ID: 1995584) Visitor Counter : 133