தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

முப்படைகளின் தலைமை தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் அனில் சவுகான், தில்லியில் உள்ள டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துக்கு வருகை தந்தார்

Posted On: 12 JAN 2024 2:05PM by PIB Chennai

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத்துறையின் முதன்மை தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (சி-டாட்) தில்லி வளாகத்துக்கு பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி.எஸ்) ஜெனரல் அனில் சவுகான் இன்று  வருகை தந்தார். தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நாட்டின் தேவைகளுக்காக உள்நாட்டு, பாதுகாப்பான தொலைத்தொடர்பு தீர்வுகளை உருவாக்குவதில் சி-டாட் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

சி.டி.எஸ் பயணத்தின் போது, முக்கிய தொலைத்தொடர்பு பாதுகாப்பு பகுதிகளிலிருந்து மாறுபட்ட தொலைத்தொடர்பு தீர்வுகள் குறித்து, சி.டி.எஸ் மற்றும் ஆயுதப்படைகளின் பிற மூத்த அதிகாரிகளுக்கு சி-டாட் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உபாத்யாய்,  விரிவான செயல் விளக்கங்களை அளித்தார்.

தொழில்நுட்பத்துப் பயன்படுத்தி பேரிடர் மேலாண்மைக்குத் தீர்வு காணுதல், ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் & அணுகலுக்கான தீர்வு போன்ற பிற தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாதிரி பயன்பாடுகளை உபயோகித்து தீர்வுகளுக்கான ஆய்வக செயல்விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

ஜெனரல் சவுகான் சி-டாட் பொறியாளர்களுடன் கலந்துரையாடினார்  நவீனகால போர் முறையில் கட்டமைப்பு மையத்திலிருந்து தரவுகளை மையமாகக் கொண்ட எதிர்கால மற்றும் மேம்பட்ட பாதுகாப்பான தகவல்தொடர்பு தீர்வுகளை ஒருங்கிணைக்க சி-டாட் மற்றும் இந்திய ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளுக்கு இடையில் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பின் அவசியத்தேவை குறித்தும் வலியுறுத்தினார்.

இந்திய ஆயுதப்படைகளின் தேவைகளுக்கு ஏற்ப அதிநவீன பாதுகாப்பு தீர்வுகளை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை சி-டாட் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் உபாத்யாய் சி.டி.எஸ்ஸிடம் உறுதியளித்தார்.

ஜெனரல் அனில் சவுகான், "நமது நாடு மாற்றத்தின் மத்தியில் உள்ளது, நாம் டிஜிட்டல் மயமாக்கத்தின் பாதையில் பயணிக்கிறோம், நமது நடவடிக்கைகள் அனைத்தும் உள்நாட்டுமயமாக்கலை நோக்கி முன்னெடுக்கப்படுகின்றன" என்று கூறினார். "சி-டாட் அலுவலகத்திற்கு சென்றதன் மூலம், நமது தகவல்தொடர்பு அமைப்பு மற்றும் இணையவெளியைப் பாதுகாப்பதற்கான நமது நாட்டின் திறனை நான் நம்புகிறேன், "என்று அவர் மேலும் கூறினார்.

சி.டி.எஸ் ஜெனரல் சவுகான் தலைமையிலான முழு பாதுகாப்புக் குழுவுக்கும் சி-டாட் நன்றி தெரிவித்ததுடன், உற்சாகத்தையும் வெளிப்படுத்தியது. இந்த ஈடுபாட்டை மகத்தான வெற்றியுடன் மேலும் கொண்டு செல்வதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

***

(Release ID: 1995457)

ANU/PKV/BS/AG/RR



(Release ID: 1995484) Visitor Counter : 87


Read this release in: English , Urdu , Hindi , Telugu