ஆயுஷ்
குவஹாத்தியில் ஹோமியோபதிக்கான பிராந்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
प्रविष्टि तिथि:
11 JAN 2024 4:56PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் 2024 ஜனவரி 12 அன்று குவஹாத்தியின் அசாராவில் ஹோமியோபதிக்கான பிராந்திய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த ஆயுஷ் நல்வாழ்வு மையத்தின் நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.53.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் 1984-ம் ஆண்டில் குவஹாத்தியின் ஓடல்பக்ராவில் வாடகை கட்டடத்தில் ஹோமியோபதியின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவாக நிறுவப்பட்டது. தற்போது இது மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் பழைய கட்டிடத்தில் குவஹாத்தியின் பெத்தபாராவில் அமைந்துள்ளது.
இந்நிறுவனம் மிகக் குறைந்த கட்டணத்தில் ஆய்வக சேவைகளை வழங்கி வருகிறது. தோல் சம்பந்தமான நோய்கள், காலரா / இரைப்பை குடல் அழற்சி, நாள்பட்ட சைனசிடிஸ் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள், கருப்பைக்கட்டி, காதுகுழாய் அழற்சி, உயர் இரத்த அழுத்தம், தடிப்புத் தோல் ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கான மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் என்பது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு உயர் ஆராய்ச்சி அமைப்பாகும், இது இந்தியாவில் ஹோமியோபதி துறையில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஒருங்கிணைக்கிறது. இது 27 நிறுவனங்களின் கட்டமைப்பு மூலம் நாடு முழுவதும் பன்முக ஆராய்ச்சியை நடத்துகிறது.
---
(Release ID: 1995216)
ANU/AD/IR/KPG/KRS
(रिलीज़ आईडी: 1995335)
आगंतुक पटल : 143