பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சவூதி கடற்படைத் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல் - கோஃபாய்லியின் இந்தியப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JAN 2024 5:06PM by PIB Chennai

சவுதி கடற்படையின் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி ஜனவரி 10 முதல் 13 வரை இந்தியாவில் 4 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சவூதி அரேபியா, இந்தியக் கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால உறவுக்கு இப்பயணம் ஒரு சான்றாகும்.

அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி ஜனவரி 11 அன்று புதுதில்லியில் இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாரை சந்தித்து, கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாலி, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி, பாதுகாப்புத்துறைச் செயலாளர், விமானப்படைத் தளபதி, ராணுவத் துணைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

-----

(Release Id: 1995227)

ANU/PKV/IR/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1995291) வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी