கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2047-ஐ நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு நீர்வழி மேம்பாட்டுக் குழுமத்துடன் ஒரு பெரிய நடவடிக்கையை உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மேற்கொள்கிறது
प्रविष्टि तिथि:
11 JAN 2024 1:00PM by PIB Chennai
நாட்டின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முறையை வலுப்படுத்துவதற்காக உள்நாட்டு நீர்வழி மேம்பாட்டு குழுமத்தின் (ஐ.டபிள்யூ.டி.சி) முதல் கூட்டம் 2024, ஜனவரி 8, அன்று கொல்கத்தாவில் நிறைவடைந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், எம்.வி.கங்கா குயின் கப்பலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், அசாம், நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், மிசோரம், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 21 மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளைச் சேர்ந்த 124 பேர் கலந்து கொண்டனர்.
முதல் ஐ.டபிள்யூ.டி.சி கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துதல், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க ஆற்றுப் படகு சுற்றுலா, புதைபடிவ எரிபொருள் அல்லாத கப்பல் செயல்பாடுகளின் அடிப்படையில் நிலைத்தன்மை நடைமுறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அமர்வுகள் இருந்தன.
நாகாலாந்து, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், பயணிகள் மற்றும் / அல்லது சரக்கு போக்குவரத்தை ஆதரிக்கும் திறனைக் கொண்ட அந்தந்த மாநிலங்களின் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை (என்.டபிள்யூ -101, என்.டபிள்யூ -4) எடுத்துரைத்தன, மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
----
ANU/PKV/IR/KPG/KV
(रिलीज़ आईडी: 1995142)
आगंतुक पटल : 169