சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சர்வதேச ஊதா விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையை அதிகரிக்கிறது

Posted On: 09 JAN 2024 12:43PM by PIB Chennai

கோவா மாநிலம், பனாஜியில் நேற்று (08.01.2024) சர்வதேச ஊதா விழா தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம், கோவா அரசின் கீழ் உள்ள சமூக நல இயக்குநரகம், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆகியவை இணைந்து வரும் 13-ம் தேதி வரை இந்த விழாவை நடத்துகின்றன. கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் இந்த விழாவைத் தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் பேசிய கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த்,  மாற்றுத்திறனாளிகள்  நலனுக்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், கோவா மாநில அரசும் செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளுக்காக கிளவுட் அடிப்படையிலான நாட்டின் முதல் ஐவிஆர்எஸ் தகவல் நடைமுறை தொடங்கப்பட்டதன் மூலம் ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவை 21 குறைபாடுகள் குறித்த தகவல்களை வழங்குகிறது, 1800222014 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் இந்த சேவையை  அணுகலாம்.

தொடக்க விழாவில் இந்திய இசைத் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற படைப்பாளிகளின் நிகழ்ச்சிகளுடன் 'துமால்' கீதம் இடம் பெற்றது. இது ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது.

பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுடன் முதல் நாள் விழா நிறைவடைந்தது.

-----

(Release ID: 1994450)
ANU/SMB/PLM/KPG/RR



(Release ID: 1994551) Visitor Counter : 86


Read this release in: English , Urdu , Hindi , Telugu