பாதுகாப்பு அமைச்சகம்
துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் ஐடெக்ஸ்- டிஐஓ பங்கேற்கிறது
Posted On:
07 JAN 2024 4:07PM by PIB Chennai
குஜராத்தின் காந்திநகரில் 2024 ஜனவரி 10 முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள பத்தாவது, துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2024-ல், பாதுகாப்புத் துறை உயர்திறன் கண்டுபிடிப்புகளுக்கான பாதுகாப்பு புதுமைக் கண்டுபிடிப்பு அமைப்பு (Innovations for Defence Excellence - Defence Innovation Organization - iDEX -DIO - ஐடெக்ஸ்-டிஐஓ) பங்கேற்க உள்ளது. 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்ற உச்சிமாநாட்டின் கருப்பொருளின் அடிப்படையில் ஒரு ஐடெக்ஸ் அரங்கம் அமைக்கப்படுகிறது. இதில் தானியங்கித் தீர்வுகள், செயற்கை நுண்ணறிவு, இணையதளப் பாதுகாப்பு போன்ற துறைகளில் எதிர்கால தொழில்நுட்பங்கள் ஐடெக்ஸ் டிஐஓ சார்பில் காட்சிப்படுத்தப்படும்.
ஐடெக்ஸ் செயல்பாட்டின் கீழ் உள்ள முன்னணி பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்,இந்த உலகளாவிய உச்சிமாநாட்டின் போது நடைபெறவுள்ள துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சி 2024-ல் தங்கள் அதிநவீன கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன. இந்தக் கண்காட்சியில் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகள், ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் சேவைகள் இடம்பெறும்.
புதிய கூட்டு செயல்பாடுகள் மற்றும் கூட்டு ஒத்துழைப்புகளை ஆராய்வது, தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவது ஆகியவற்றிலும் ஐடெக்ஸ் ஈடுபடும்.
ஐடெக்ஸ் பற்றி
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை திட்டமான ஐடெக்ஸ் (பாதுகாப்பு உயர்சிறப்புக் கண்டுபிடிப்புகள்) 2018-ம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், தொழில் பாதுகாப்பகங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஒத்துழைத்து செயல்படுவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இது தற்போது சுமார் 400 க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குரு சிறு நடுத்தர நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதுவரை ரூ. 2000 கோடி மதிப்புள்ள 31 பொருட்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சூழல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் சிறந்தஅங்கீகாரத்தைப் பெற்று செயல்படும் ஐடெக்ஸ், பாதுகாப்புத் துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான பிரதமரின் விருதைப் பெற்றுள்ளது.
----
ANU/PKV/PLM/DL
(Release ID: 1993967)
Visitor Counter : 125