பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2023-ஆம் ஆண்டில் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை மேற்கொண்ட முக்கிய முன்முயற்சிகள்

Posted On: 04 JAN 2024 3:46PM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (டி.ஏ.ஆர்.பி.ஜி) 2023-ஆம் ஆண்டிற்கான செயல்திறனை வெளியிட்டது. இத்துறையின் சாதனைகள் பற்றிய சுருக்கம் பின்வருமாறு:

2023 பிப்ரவரி 17 முதல் 18 வரை  நடைபெற்ற பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சிந்தனை முகாமில், ஆளுமையில் தனது பரந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், ஆளுமையற்ற ஆளுகை மாதிரிகள் ஆழ்ந்த தனிப்பட்ட அர்ப்பணிப்பு மூலம் உயிர்ப்பு பெற வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினார்.

2023 ஏப்ரல் 20-21 தேதிகளில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 16-வது குடிமைப்பணி தினம் "வளர்ந்த பாரதம்- குடிமக்கள் அதிகாரமளித்தல்& கடைசி பயனாளி வரை அடைதல்" என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏப்ரல் 21 அன்று 15 விருதுகளை வழங்கினார். 26,000 அரசு அலுவலர்கள் நேரடியாகவும் இணைய வழியாகவும்  கலந்து கொண்டதால், இந்தக் குடிமைப்பணி தினத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  அதிக பங்கேற்பு இருந்தது.

மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைசார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி வார விழா நடைபெற்றது. மூன்றாவது நல்லாட்சி வார விழா வெற்றி பெற பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் பீம் ஆடிட்டோரியத்தில்  டிசம்பர் 19, 2023 அன்று நடைபெற்ற   நல்லாட்சி வார கொண்டாட்டங்களின் துவக்க விழாவில்  நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால்  சிறப்பு பிரச்சாரம் 3.0 மத்திய அரசு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் இந்தியாவின் இந்த மிகப்பெரிய பிரச்சாரம் பல சிறந்த நடைமுறைகள் மற்றும் மைல்கற்களைக் கண்டுள்ளது.

சிறப்பு பிரச்சாரம் 3.0, இந்தியா முழுவதும் 2.59 லட்சம் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டது, 164 லட்சம் சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது, 49.55 லட்சம் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன, 5.22 லட்சம்  வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. 2021-2023 காலகட்டத்தில்  மூன்று கட்டங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் ரூ.1162.49 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் சிறப்பு இயக்கம் 3.0 மூலம் ரூ.556.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

 

2023-ஆம் ஆண்டில், அனைத்து மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மூலம் கிட்டத்தட்ட 19,45,583 புகார்கள் மற்றும் 1,79,892 மேல்முறையீடுகள் பெறப்பட்டன. 2023-ஆம் ஆண்டில், ஜனவரி முதல் நவம்பர் வரை பி.எஸ்.என்.எல் கால் சென்டரால் குடிமக்களிடமிருந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக நேரடியாக 7,32,355 கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

----

ANU/PKV/RB/DL



(Release ID: 1993722) Visitor Counter : 66


Read this release in: English , Urdu , Hindi