இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லக்னோவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் சார்பில் ஊக்கமருந்து எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Posted On: 05 JAN 2024 2:34PM by PIB Chennai

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை லக்னோவில் உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் சார்பில்  ஊக்கமருந்து எதிர்ப்பு விழிப்புணர்வு அமர்வை நடத்தியது . இந்த அமர்வு லக்னோவில் உள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டு கல்லூரியில் 2024, ஜனவரி 4 அன்று நடைபெற்றது.

இது நேர்மையான விளையாட்டுத்திறன் கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. 30 தடகள ஆதரவு பணியாளர்கள் உட்பட 200-க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றனர். ஊக்கமருந்து எதிர்ப்பு விழிப்புணர்வு அமர்வு விளையாட்டு வீரர்கள்பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஊழியர்களுக்கு விளையாட்டில் ஒருமைப்பாட்டை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை கற்பிப்பதற்கும் அதிகாரமளிப்பதற்கும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைப் பணியின் ஒரு பகுதியாகும்.

----

(Release ID: 1993408)

ANU/SM/BS/KPG/KRS 


(Release ID: 1993640)