பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரபிக்கடலில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது

Posted On: 05 JAN 2024 12:44PM by PIB Chennai

அரபிக்கடலில் லைபீரியா கப்பலை கடத்த நடந்த  முயற்சியின் போது இந்தியக் கடற்படை விரைவாக பதில் நடவடிக்கையில் ஈடுபட்டது. ஜனவரி 4 அன்று மாலை சுமார் ஐந்து முதல் ஆறு அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய வீரர்கள் கப்பலில் ஏறுவதாக ஒரு செய்தியை UKMTO இணையதளத்திற்கு லைபீரியா கப்பல் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து சூழ்நிலைக்கு ஏற்றவகையில் விரைவாக பதில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியக் கடற்படை, கடல் ரோந்து விமானத்தை ஏவியது. கப்பலுக்கு உதவ கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்ட ஐ.என்.எஸ் சென்னைக் கப்பலை அந்தப் பகுதிக்கு அனுப்பியது.

ஜனவரி 05 அதிகாலையில், ரோந்து விமானம் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.

கடற்படை விமானங்கள் தொடர்ந்து நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றன. ஐ.என்.எஸ் சென்னை கப்பல் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

அப்பகுதியில் உள்ள பிற முகமைகள் / எம்.என்.எஃப் உடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேசக் கூட்டமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளுடன் பிராந்தியத்தில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியக் கடற்படை உறுதிபூண்டுள்ளது

----

(Release ID: 1993347)

ANU/PKV/BS/KPG/KRS


(Release ID: 1993565) Visitor Counter : 139